முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / அலுவல்சாரா உறுப்பினர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.... திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அழைப்பு

அலுவல்சாரா உறுப்பினர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.... திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அழைப்பு

காட்சிப்படம்

காட்சிப்படம்

முதியோர் நல மேம்பாட்டு பணிகளில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவமும், முழு ஈடுபாடும் உள்ள 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

  • Last Updated :
  • Dindigul |

திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான முதியோர்களுக்கான உயர்நிலை ஆலோசனை குழுவிற்கு அலுவல்சாரா உறுப்பினராக தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாநில அளவிலான முதியோர்களுக்கான உயர்நிலை ஆலோசனை குழுவிற்கு அலுவல்சாரா உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இவ்வலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 வருடங்கள் ஆகும். முதியோர் நல மேம்பாட்டு பணிகளில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவமும், முழு ஈடுபாடும் உள்ள 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதையும் வாசிக்க: எஸ்பிஐ வங்கியில் 1,673 ப்ரோபேஷனரி ஆபீசர் பணியிடங்கள்: 12-ம் தேதியே கடைசி !

top videos

    திண்டுக்கல் மாவட்டத்தில் விருப்பமும், தகுதியும் உள்ள நபர்கள் தங்கள் விண்ணப்பங்களை, ”மாவட்ட சமூகநல அலுவலர், அறை எண்.88, மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திண்டுக்கல்” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தொலைபேசி எண்.0451-2460092-ல் சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

    First published: