முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தில் காலி பணியிடங்கள்... நேர்காணல் தேதி அறிவிப்பு

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தில் காலி பணியிடங்கள்... நேர்காணல் தேதி அறிவிப்பு


திருப்பூர் மாவட்டத்தில் காலியிடங்கள்

திருப்பூர் மாவட்டத்தில் காலியிடங்கள்

DHS Recruitment 2022 : விண்ணப்பதாரர் சமீபத்திய புகைப்படத்துடன் மேற்காணும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

 • Last Updated :

திருப்பூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் மற்றும் Universal Health coverage திட்டங்களின் கீழ் ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடும் பொருட்டு 21.01.2022 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது. எனவே தகுதியுள்ள விண்ணப்பத் தாரர்கள் இந்நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

வேலைக்கான விவரம் :

நிறுவனம்திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம்
வேலையின் பெயர்DEO, Lab Technician, Social Worker, District Consultant, Psychologist/Counselor
வேலை வகைதமிழக அரசு வேலை
பணியிடம்திருப்பூர்
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை05 காலிப்பணி இடங்கள்
தேர்வு செய்யப்படும் முறைWalk-in-Interview
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி10.01.2022
சம்பள விவரம்ரூ.13,000 - ரூ.35,000 வேலைக்கு தகுந்தாற் போன்று சம்பளம் மாறுபடும்
கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து CMLT/ DMLT/ 12th/ MBBS/ BDS/ Post Graduate Degree படித்திருக்க வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் நேரம்10:00 AM
நேர்காணல் நடைபெறும் தேதி24.01.2022
நேர்காணல் நடைபெறும் இடம்துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், S.F. No.147, பூலுவப்பட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் சாலை, திருப்பூர், 641602
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது

நிபந்தனைகள் :

 • இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது
 • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
 • பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.

குறிப்பு :

 • விண்ணப்ப படிவங்களை வலைதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட நகல்கள் இணைத்து நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
 • கீழே கையொப்பமிட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு / தேர்வுக்கு பொருத்தமான வேட்பாளரை அழைக்கும் உரிமை உள்ளது.
 • விண்ணப்பதாரர் சமீபத்திய புகைப்படத்துடன் மேற்காணும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
 • நேர்காணலின் போது அசல் ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட வேண்டும்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/01/2022011046.pdf

top videos

  இந்த லிங்கில் சென்று காணவும்.

  First published:

  Tags: Job Vacancy