முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / சட்ட மாணவர்களுக்கான இண்டர்ன்ஷிப் திட்டம்: LLB படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

சட்ட மாணவர்களுக்கான இண்டர்ன்ஷிப் திட்டம்: LLB படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இண்டெர்ன்ஷிப் திட்டம்

இண்டெர்ன்ஷிப் திட்டம்

விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன. ஜூன் 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சட்ட மாணவர்களுக்கான மாதாந்திர  உள்ளகப்பயிற்சி (Monthly internship) திட்டத்தை மத்திய சட்ட விவகாரத் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், டெல்லி,மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய மாநிலங்களில் செயல்படும்  சட்டவிவகாரத்துறை அமைச்சகத்தின் மண்டல அலுவலங்களில் பயிற்சி பெறுவதாற்கான வாய்ப்பு  அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் இந்திய மாணவர்களாக இருக்க வேண்டும்.

மூன்றாண்டு பட்டப்படிப்பின் 2வது மற்றும் 3வது ஆண்டு மற்றும் ஐந்தாண்டு பட்டப்படிப்பின் 3வது முதல் 5வது ஆண்டு வரை படிக்கும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி/சட்டப் பள்ளி/பல்கலைக்கழகத்தில் இருந்து LLB படிப்பை முடித்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம்: விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன. ஜூன் 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இண்டர்ன்ஷிப்பின் காலம்: மாதாந்திர இண்ன்டர்ன்ஷிப்கள் திட்டம் ஜூன் 2022 முதல் மே 2023 வரை செயல்படும். இந்த திட்டத்தின் கீழ்  மாணவர்கள் பொதுவாக ஒரு மாத காலத்திற்கு பயிற்சி பெறுவார்கள். ஒவ்வொரு மாதத்திலும், அதிகபட்சமாக 10-30 பயிற்சியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த பயிற்சித் திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்கள், தங்களின் கல்லூரி/சட்டப் பள்ளி/பல்கலைக்கழகத்திலிருந்து உரிய ஆவணங்கள்/ தடையில்லா சான்றிதழுடன் (என்ஓசியுடன்) தங்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யலாம். https://legalaffairs.gov.in/internship என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை அணுகலாம். அனைத்து விண்ணப்பதாரர்களும் ஆன்லைனில் படிவத்தை பூர்த்தி செய்து, இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி கடைசி தேதிக்கு முன்னதாக அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளவில் அனுமதி அளிக்கப்படும் என்பதால் மாணவர்கள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இன்டர்ன்ஷிப் திட்டத்தின் முடிவில், சட்ட விவகாரத் துறையில் தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சயாளர்களின் செயல்திறன் திருப்திகரமாக இருந்தால், கௌரவத் தொகையுடன் இன்டர்ன்ஷிப் சான்றிதழும் வழங்கப்படும். இந்த வாய்ப்பு  முழுநேரப் பயிற்சித் திட்டமாகும். நேரில் கலந்து கொள்ள வேண்டும். இண்டர்ன்ஷிப்பின் காலத்தின் போது பிற பணிகளில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வப்போதைய நிலவரங்களை தெரிந்து கொள்ள, தெளிவுரை பெற  011-23387914 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம். மின்னஞ்சல் முகவரி:  admn1-la@nic.in

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: https://legalaffairs.gov.in/internship/

Guidelines for LLB Internship programme in the Department of Legal Affairs

First published:

Tags: Law