ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

டெல்லி ராம்ஜாஸ் கல்லூரியில் 148 உதவி பேராசிரியர் பணியிடங்கள்: நெட் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

டெல்லி ராம்ஜாஸ் கல்லூரியில் 148 உதவி பேராசிரியர் பணியிடங்கள்: நெட் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

காட்சி படம்

காட்சி படம்

இந்த நியமங்களுக்கு இடஒதுக்கீடு விதிமுறைகள் பின்பற்றப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள்  தேவைப்படும் ஆவணங்கள் சமர்பித்து இடஒதுக்கீடு பலன்களை அடையலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  148 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தின் ராம்ஜாஸ் கல்லூரி வெளியிட்டுள்ளது. இந்திய குடியுரிமை பெற்றவர்களும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

  காலியிடங்கள்: 148

  கல்விக்கான தகுதிகள்:  

  சம்பந்தப்பட்ட துறைகளில், பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து 50% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  கூடுதலாக, பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் சிஎஸ்ஐஆர்  நடத்தும் தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

  (அல்லது)   

  க்யு எஸ் சர்வதேச பல்கலைக்கழக தரவரிசை, டைம்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல், Academic Ranking உலக பல்கலைக்கழக தரவரிசை ஆகிய பட்டியல்களில் முதல் 500 இடங்களில் இடம்பிடித்துள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஆய்வுப்பட்டம் (Phd) பெற்ற மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

  தெரிவு செய்யப்படும் முறை: 

  இளநிலை, முதுநிலை, எம்பில்/எம்.டெக், எல்எல்எம்/எம்.எட் அல்லது சமமான கல்வி, முதுநிலை ஆராய்ச்சி (phd), நெட் மதிப்பெண், நெட் மதிப்பெண்ணுடன் இளநிலை ஆராய்ச்சி, ஆராய்ச்சி கட்டுரைகள், கற்றல் அனுபவம், விருதுகள் ஆகியவற்றில் பெறும் உயர்ந்தபட்ச மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் வகுப்புவாரி இடஒதுக்கீடு மற்றும் மொத்த காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தற்காலிகத் தேர்வு பட்டியல் தயார் செய்யப்படும்.

  விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.500ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.

  இதையும் வாசிக்க:  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை நூலகப் பாடவேளை: பள்ளிக்கல்வித் துறையின் புதிய முயற்சி

  இந்த நியமங்களுக்கு இடஒதுக்கீடு விதிமுறைகள் பின்பற்றப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள்  தேவைப்படும் ஆவணங்கள் சமர்பித்து இடஒதுக்கீடு பலன்களை அடையலாம்.

  இதையும் வாசிக்க:  கருவுற்று இருந்தால் வேலைக்கு தகுதி அற்றவரா? இந்தியன் வங்கிக்கு சு.வெங்கடேசன் கண்டனம்

  www.ramjas.du.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.  வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசலிக்கப்பட்டு (Selection Committee) தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்விற்கு அழைப்பு அனுப்பப்படும்.

  RAMJAS COLLEGE UNIVERSITY OF DELHI Advt. No. RJC/Teaching/Asstt. Prof./2022

  Published by:Salanraj R
  First published:

  Tags: Government jobs