ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

எஸ்எஸ்சி தேர்வு : கடைசி வரை காத்திருக்காமல் இப்போதே இதை செய்யுங்கள்

எஸ்எஸ்சி தேர்வு : கடைசி வரை காத்திருக்காமல் இப்போதே இதை செய்யுங்கள்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

Delhi Police Constable Driver Examination: தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை கடைசி நேரம் வரை காத்திருக்காமல் இப்போதே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டெல்லி காவல்துறையில் ஆண் காவலருக்கான (ஓட்டுனர்) தேர்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது.

  தேர்வு விவரம்: 21.10.2022 அன்று, காலை 9:00 முதல் 10:30 வரை, மதியம் 1:00 முதல் 2:30 வரை, மாலை 5:00 முதல் 6:30 வரையென 3 கட்டங்களாகத் தேர்வு நடத்தப்படும்.

  கணினி வாயிலாக நடைபெறும் இந்தத் தேர்வை தென் மண்டலத்தில் 7247 பேர் எழுத உள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோயம்பத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், ஆந்திர பிரதேசத்தில் குண்டூர், கர்னூல், ராஜமுந்திரி, திருப்பதி, விசாகப்பட்டினம், விஜயவாடா, காக்கிநாடா, நெல்லூர், சிராலா மற்றும் தெலங்கானாவில் ஐதராபாத், வாராங்கல், கரீம்நகர் ஆகிய 19 மையங்கள்/ நகரங்களில் உள்ள 20 இடங்களில் இந்தத் தேர்வு நடைபெறும்.

  Constable (Driver)-Male in Delhi Police Examination, 2022

  அனுமதிச்ச சீட்டு:  இதற்கான மின்னணு அனுமதி சான்றிதழை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் https://ssc.nic.in என்ற  இணையதளத்தில்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு சம்பந்தமான தகவல்கள் அனைத்தும் அவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளன.

  இதையும் வாசிக்க: சேலத்தில் அரசு வேலை.. ₹30000 சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது? விவரம் இதோ...

  மின்னணு அனுமதி சான்றிதழ் மற்றும் அசல் தகுதிச் சான்றை விண்ணப்பதாரர்கள் தேர்விற்கு கட்டாயம் எடுத்து வர வேண்டும். கூடுதல் தகவல்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 044-28251139, 9445195946 (செல்பேசி) ஆகிய தென் மண்டல அலுவலகத்தின் உதவி எண்களை விண்ணப்பதாரர்கள் தொடர்பு கொள்ளலாம்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job Vacancy, Recruitment, SSC