Home /News /employment /

டெல்லி மெட்ரோவில் காலியிடம்; என்ன தகுதி? என்ன வேலை? விண்ணப்பிப்பது எப்படி?

டெல்லி மெட்ரோவில் காலியிடம்; என்ன தகுதி? என்ன வேலை? விண்ணப்பிப்பது எப்படி?

டெல்லி மெட்ரோவில் காலியிடம்

டெல்லி மெட்ரோவில் காலியிடம்

Delhi Metro recruitment 2022 : டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு விண்ணப்பத்தின் இறுதித் தேதியான மார்ச் 15, 2022 அன்று 55 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனில் (Delhi Metro Rail Corporation) தலைமை விஜிலென்ஸ் அதிகாரி (Chief Vigilance Officer) காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெல்லி மெட்ரோவின் அறிவிப்பின் படி, ஒரே ஒரு பதவி மட்டுமே வழங்கப்படுகிறது மற்றும் தகுதியும் அனுபவமும் உள்ள விண்ணப்பதாரர்கள் முதலில் 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுவார்கள்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை இறுதித் தேதி அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும் இல்லையெனில் அவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது. தேர்விற்கான செயல்முறை ஆனது குறித்த நேரத்தில் தெரிவிக்கப்படும். இது ஒரு இன்டர்னல் வேக்கன்ஸி (internal vacancy) என்பதை நினைவில் கொள்க. இந்த வேலைக்கு என்ன தகுதி, செலெக்ஷன் ப்ராசஸ் என்ன? வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை பற்றி விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும்.

டெல்லி மெட்ரோ காலியிடம் 2022: குறிப்பிட்ட வேலைக்கான தகுதி என்ன?

ஏற்கனவே எஸ்.ஏ.ஜி (SAG) அல்லது நான்-பன்க்ஷனல் எஸ்ஏஜி-இல் (non-functional SAG)பணிபுரியும் அதிகாரிகள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவார்கள். குறிப்பிட்ட அதிகாரி சிவில் / எலக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல் துறையில் பணிபுரிந்த அனுபவம் மற்றும் வேலை தொடர்பான கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பற்றிய அறிவும் பெற்றிருக்க வேண்டும். டி&ஏஆர் அவரேஜிங் கேஸ்கள் (D&AR averaging cases) இல்லாமல் இருக்க வேண்டும்.

டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு விண்ணப்பத்தின் இறுதித் தேதியான மார்ச் 15, 2022 அன்று 55 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

டெல்லி மெட்ரோ காலியிடம் 2022: செவென்த் பே கமிஷன் சம்பளம்

ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் 7வது ஊதியக் குழுவின் லெவல் 14 பே மேட்ரிக்ஸின் படி மாதச் சம்பளம் மற்றும் அது தொடர்பான அனைத்து அலவன்ஸ்களையும் பெறுவார்கள்.

டெல்லி மெட்ரோவின் வேலைவாய்ப்பு குறித்த விரிவான விளம்பரத்தை கிளிக் செய்து படிக்கவும் - http://delhimetrorail.com/CareerDocuments/CVO-Advertisement-31-14022022.pdf

டெல்லி மெட்ரோ காலியிடம் 2022: ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை அணுகுவது எப்படி?

01. டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனின் delhimetrorail.com/ என்கிற அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குள் செல்லவும்

02. அங்கே கேரியர் (career) என்கிற டேப்-ஐ கிளிக் செய்து, பின் குறிப்பிட்ட பேஜில் கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்யவும்.

03. இப்போது "REQUIREMENT OF CHIEF VIGILANCE OFFICER (CVO) ON DEPUTATION FROM RAILWAYS-DEPUTATION-31" என்பதை கிளிக் செய்யவும், அதாவது தலைமை விஜிலன்ஸ் அதிகாரிக்கான தேவை-31 என்பதை கிளிக் செய்யவும்.

04. இப்போது ஒரு பிடிஎஃப் (pdf) ஸ்க்ரீனில் காட்டப்படும்; வழிமுறைகளை கவனமாகப் படித்து அதனுடன் இணைக்கப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

05. தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும், சமீபத்தில் எடுக்கப்பட்ட, சரியான அளவிலான போட்டோவை அட்டெஸ்ட் செய்து, தேவையான ஆவணங்களையும் அட்டாச் செய்யவும்.

06. பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவம் நிரப்பப்பட்டதும், விண்ணப்பதாரர் ஸ்கேன் செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை Internalvacancydmrc@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Job Vacancy

அடுத்த செய்தி