ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

வெல்லிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

வெல்லிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

வெல்லிங்டன், ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரி

வெல்லிங்டன், ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரி

Defence services staff college wellington Recrutiment:விண்ணப்பங்களை dssc.gov.in  என்ற வலைதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து அதில் மட்டுமே பூர்த்தி செய்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழகத்தில் உள்ள வெல்லிங்டன், ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் இளநிலை எழுத்தர் (Lower Division Clerk), பன்னோக்கு பணியாளர் (Multi tasking staff), வாகன ஓட்டுநர் (Civilain Motor Driver)  காலிப் பணியிடங்களுக்கான ஆட் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

  காலியிடங்கள்:   

  இளநிலை எழுத்தர் -04;

  வாகன ஓட்டுநர் -  03;

  பன்னோக்கு பணியாளர் -05.

  கல்வித் தகுதி:

  இளநிலை எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் (அல்லது) இந்தியில் வினாடிக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு அடிக்கும் திறன் வேண்டும்.

  வாகன ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 12ம் வகுப்புத் தேர்ச்சியுடன், கனரக வாகனங்கள் இயக்குவதில் 2 ஆண்டுகள் முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

  பன்னோக்குப் பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  சம்பளம்:

  இளநிலை எழுத்தர் பதவிக்கு 19,900 முதல் 63,200 வரையிலான  நிலை 2 சம்பளம் இருக்கும். வாகன ஓட்டுநர் பதவிக்கு 19,900 முதல் 63, 200 வரையிலான நிலை 2 சம்பளம் இருக்கும். பன்னோக்குப் பணியாளர் பதவிக்கு 18,000 முதல் 56,900 வரையிலான நிலை 2 சம்பளம் இருக்கும்.

  வயது வரம்பு: இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 28.10.2022 அன்று 18-க்கு மேலும், 27-க்கு கீழும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.    நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

  விண்ணப்பங்களை dssc.gov.in  என்ற வலைதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து அதில் மட்டுமே பூர்த்தி செய்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

  இதையும் வாசிக்க: 2 மாதங்களில் 73,333 மத்திய அரசு பணியிடங்களை நிரப்ப எஸ்எஸ்சி திட்டம்

  28.10.2022 தேதிக்குள் வரும் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியான நபர்களுக்கு மட்டுமே எழுத்துத் தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே திறனறிவுத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job Vacancy, Recruitment