முப்படை அகாடமிகளில் காலியாக உள்ள 417 அதிகாரி பணியிடங்கள்!

இந்திய ராணுவ அகாடமியில் 100 இடங்களும், இந்திய கடற்படை  அகாடமியில் 45 இடங்களும், விமானப் படை அகாடமியில் 32 இடங்களும், சென்னை ஆபிஸர் ட்ரெய்னி அகாடமியில் 240 இடங்களும் காலியாக உள்ளன.

news18
Updated: November 24, 2018, 9:05 PM IST
முப்படை அகாடமிகளில் காலியாக உள்ள 417 அதிகாரி பணியிடங்கள்!
கோப்புப் படம்
news18
Updated: November 24, 2018, 9:05 PM IST
ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகிய முப்படைப் பிரிவுகளின் அகாடமிகள் மற்றும் சென்னை ஆபிஸர்ஸ் ட்ரெய்னி அகாடமியில் காலியாக உள்ள 417 அதிகாரி பணியிடங்களை விரைவில் நிரப்பப்பட உள்ளன.

சிடிஎஸ் நடத்தவுள்ள இந்தத் தேர்வில், இந்திய ராணுவ அகாடமியில் 100 இடங்களும், இந்திய கடற்படை அகாடமியில் 45 இடங்களும், விமானப் படை அகாடமியில் 32 இடங்களும், சென்னை ஆபிஸர் ட்ரெய்னி அகாடமியில் 240 இடங்களும் காலியாக உள்ளன.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி) நடத்தவுள்ள ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகளுக்கான தேர்வு [சி.டி.எஸ் – 2019 (1)] மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது வரம்பு: ராணுவம் மற்றும் கடற்படை அகாடமிகளுக்கு விண்ணப்பிப்போர் 2-1-1996 மற்றும் 1-1-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். பிற அகாடமிகளுக்கு விண்ணப்பிப்போர் 20 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: கடற்படை அகாடமிக்கு விண்ணப்பிப்போர் என்ஜினியரிங் பட்டதாரிகளாக இருக்க வேண்டும். பிற அகாடமிகளுக்கு விண்ணப்பிப்போர் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும். இளங்கலை பட்டப் படிப்பு கடைசி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. தவிர்த்த பிற பிரிவினர் ரூ. 200 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரும், பெண் விண்ணப்பதாரர்களும் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பகளை அனுப்பவேண்டும். இதற்கான கடைசி தேதி நவம்பர் 26. தேர்வு முறை உள்ளிட்ட பிற விவரங்களை தெரிந்துகொள்ள www.upsconline.nic.in, www.upsc.gov.in ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.

Also watch
First published: November 24, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...