முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / UGC- NET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!!

UGC- NET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!!

காட்சி படம்

காட்சி படம்

UGC- NET Exam: இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை தேர்வு  (ஜேஆர்எப்) மற்றும் உதவி பேராசிரியர் தகுதிக்கான யுஜிசி-நெட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை நடத்தப்படுவது வழக்கம்..

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்  நடத்தவுள்ள 2022 யுஜிசி –என்இடி (UGC-NET) தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.

இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை தேர்வு  (ஜேஆர்எப்) மற்றும் உதவி பேராசிரியர் தகுதிக்கான யுஜிசி-நெட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை நடத்தப்படுகிறது.

கடந்தாண்டு கொரோனா நோய்த் தோற்று காரணமாக இரண்டாம் கட்ட தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 2021 டிசம்பர் மற்றும் 2022 ஜூன் ஆகிய இரண்டு தேர்வுகளையும் ஒருங்கே நடத்த (December 2021 and June 2022 merged cycles) தேசிய தேர்வு முகமை முடிவெடுத்துது. இதற்கான, விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி தொடங்கியது. https://ugcnet.nta.nic.in/ என்ற வலைதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்நிலையில், இதற்கான விண்ணப்ப செயல்முறை இன்றுடன் முடைவடிகிறது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

தேர்வின் தன்மை:

இரண்டு தாள்கள் கொண்ட தேர்வாகும். முதல் தாளில் பொது அறிவு குறித்த 50 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். புறநிலை வகையில் பல்வேறு விடைகளிலிருந்து தெரிவுசெய்யும் வினாக்களாக அமையும். முதல் தாளின் தேர்வு காலம் ஒரு மணியாகும். 

இரண்டாம் தாளில் பாடம் சார்ந்த 100 கேள்விகளை கொண்டதாக அமையும். இந்த கேள்விகள் விண்ணப்பதாரர் தெரிவு செய்த பாடங்களிலிருந்து இடம்பெறும். இந்த கேள்வித்தாள் இரண்டு மணிநேர கால அவகாசம் கொண்டது.          

யுஜிசி-நெட் தேர்வைப் பற்றி:

நெட் தேர்வில் வெற்றி பெறுபவர்கள், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக நியமனம் பெறுவதற்குத் தகுதி பெறுகின்றனர். முதுநிலை படித்த மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 83 பாடப்பிரிவுகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. விண்ணப்பதாரர், தங்களது முதுநிலை கல்வியோடு தொடர்புடைய பாடப் பிரிவை நெட் தேர்வுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று யூஜிசி அறிவுறுத்தியுள்ளது. உதாரணமாக, அரசியலறிவு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்ற மாணவர்கள், நெட் தேர்வில் பொது நிர்வாகம் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று யுஜிசி முன்னதாக தெளிவுபடுத்தியிருந்தது.

தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள்காலம் முழுவதும் செல்லுபடியாகும்.

வயது வரம்பு: 

01.06.2022  அன்றுள்ளபடி, இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை தேர்வு எழுதுவதற்கு அதிகபட்ச வயதுவரம்பு 31 ஆக நிர்ணயிக்கப்பட்டுட்டள்ளது. இருப்பினும், பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள்/ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் /பெண்கள் ஆகியோருக்கு அதிகபட்ச வயதுவரம்பு ஐந்தாண்டுகள் தளர்த்தப்படும்.

உதவி பேராசிரியர் பதவிக்கு வயது வரம்பு இல்லை. 

First published:

Tags: Competitive Exams, Jobs