ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடம் அறிவிப்பு

தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடம் அறிவிப்பு

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடம்

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடம்

job alert தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள பணியிடங்கள் குறித்த விவரங்கள் இதோ..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தேனி மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராகக் கொண்டு செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கீழ்காணும் அட்டவணைப்படி முழுவதும் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளது.

வேலைக்கான விவரம் :

நிறுவனம்சமூக பாதுகாப்புத் துறை (District Child Protection Unit)
வேலையின் பெயர்ஆற்றுப்படுத்துநர் , புறத் தொடர்பு பணியாளர்
வேலை வகைதமிழக அரசு வேலை
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை02 காலிப்பணி இடங்கள்
ஆற்றுப்படுத்துநர்01
புறத் தொடர்பு பணியாளர்01

வயது விவரம்62 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறைWritten Test/Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
கல்வித்தகுதி
ஆற்றுப்படுத்துநர்Graduate in Psychology/Sociology or Post Graduate in Social Work
புறத் தொடர்பு பணியாளர்10ம் வகுப்பு , 12ம் வகுப்பு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

சம்பள விவரம்

ஆற்றுப்படுத்துநர்தொகுப்பூதியம் ரூ.14000/-
புறத் தொடர்பு பணியாளர்தொகுப்பூதியம் ரூ.8000/-

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி

31/12/2021

விண்ணப்பிக்க கடைசி தேதி

12/01/2022

விண்ணப்ப முறை

Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது

மேற்கண்ட கல்வித் தகுதியுடன் அரசு அலுவலராக இருந்து ஓய்வு பெற்று, அரசிதழில் கொள்கை வரைவு மற்றும் களப்பணி நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக பணி செய்த அனுபவம் உள்ளவராகவும், 62 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

ஒருவருட ஒப்பந்த அடிப்படையிலான பணியிடம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முகவரிக்கு வருகின்ற 12.01.2022 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம் - 2

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

தேனி - 625 531.

First published:

Tags: Job Vacancy