Home /News /employment /

மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை... ஒரு வருகைக்கு ரூ.1000 சம்பளம்

மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை... ஒரு வருகைக்கு ரூ.1000 சம்பளம்

மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை

மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை

உரிய சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் தென்காசி மாவட்டம், ரெட்டியார்பட்டி அரசினர் குழந்தைகள் இல்ல சிறார்களுக்கு ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் (Counselling) சேவை வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    இப்பதவிக்கு உளவியல் மற்றும் கவுன்சிலிங்கில் முதுகலைப்பட்டம் பெற்ற நபர்கள், தங்களது சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை உரிய சான்றின் ஒளிநகலுடன் 05.07.2022 க்குள் கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. பதவிக்கு தகுதியான ஆற்றுப்படுத்துநர்கள், அவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.

    தேர்வு செய்யப்படும் ஆற்றுபடுத்துநர்களுக்கு வருகையின் அடிப்படையில் ஒரு வருடத்தில் 60 நாட்களுக்கு மிகாமல் (வாரம் ஒரு முறை) மதிப்பூதிய அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூ.1000/-(ரூபாய் ஓராயிரம் மட்டும்) வழங்கப்படும். மேற்படி பதவிக்கான கல்வி தகுதி, மற்றும் அனுபவம் குறித்த விவரங்களை https://tenkasi.nic.in/notice category/recruitment ல் தெரிந்துக் கொள்ளலாம்.

    விண்ணப்பத்தினை உரிய சான்றிதழ் நகல்களுடன் 05.07.2022 மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால்/கொரியர் மூலமாகவோ அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்(பொ.), அரசினர் குழந்தைகள் இல்லம், கிராமகமிட்டி மேல்நிலைப்பள்ளி அருகில், ரெட்டியார்பட்டி,(இருப்பு) நெட்டூர் வழி, ஆலங்குளம் தாலுகா, தென்காசி - 627854. என்ற முகவரிக்கோ விண்ணப்பிக்கலாம். உரிய சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி