ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழக சத்துணவு திட்டப்பிரிவில் வேலை... கணினி இயக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக சத்துணவு திட்டப்பிரிவில் வேலை... கணினி இயக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

TN job alert : தமிழக அரசின் சத்துணவு திட்டப்பிரிவில் தற்காலிக பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழக அரசின் சிவகங்கை மாவட்ட சத்துணவு திட்டப்பிரிவில் தற்காலிக அடிப்படையில் கணினி இயக்குபவர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  பணியின் விவரங்கள்:

  பணியின் துறைசத்துணவுப் பிரிவு
  பதவியின் பெயர்கணினி இயக்குபவர்
  பணியிடங்கள்4
  ஊர்சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்,எஸ்.புதூர்,சாக்கோட்டை மற்றும் கண்ணாங்குடி
  சம்பளம்ரூ.12,000/-

  பணிக்கான வயது வரம்பு :

  இப்பதவிக்கு 01.10.2022 அன்று குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொது வகுப்பினர் 30 வயதுக்கு மிகாமலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட முஸ்ஸீம் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  இதர வகுப்பைச்சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு வயது வரம்பு சலுகை உண்டு.

  பணிக்கான கல்வித்தகுதி:

  இப்பணிக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  Also Read : தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் ஆய்வுக்கூட நுட்புநர் பணி.. முழு விவரத்தை தெரிந்துகொள்ளுங்கள்..!

  தேவையான தகுதிகள்:

  கணினியில் M.S.Office அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கீழ்நிலை தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  தேர்வு செய்யப்படும் முறை:

  விண்ணப்பதார்களில் தகுதியானவர்கள் கணினி தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

  விண்ணப்பிக்கும் முறை:

  இப்பணிக்கு ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://agaram.tn.gov.in/wlcopen/

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 15.11.2022 மாலை 5.45 வரை.

  மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Sivagangai, Tamil Nadu Government Jobs