ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரூ.63000 வரை சம்பளம்.. ரயில்வேயில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ரூ.63000 வரை சம்பளம்.. ரயில்வேயில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்தியன் ரயில்வே

இந்தியன் ரயில்வே

Railway jobs : இந்தியன் ரயில்வேயில் பண்பாட்டுக் கோட்டாவில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வடகிழக்கு ரயில்வேயில் பண்பாட்டுக் கோட்டாவில் உள்ள காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இசை சார்ந்த கலைஞர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரங்கள்:

கலைப் பிரிவுபணியிடம்
Tabla Player1
Light Music Singer (Female)1

வயது வரம்பு :

கலை கோட்டாவில் விண்ணப்பிக்க 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

கலை கோட்டாவில் தேர்வு செய்யப்படும் நபருக்கு ரூ.19,900 முதல் 63,200 வரை பணிக்கேற்ற சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

Technician-III பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

இதரப் பணிகளுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

கலைக் கோட்டாவில் ரயில்வேயில் பணிபுரிய விண்ணப்பதார்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : ரூ.2 லட்சம் வரை சம்பளம்... விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் வேலைவாய்ப்பு!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் https://ner.indianrailways.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க :  https://ner.indianrailways.gov.in/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 09.01.2023.

மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Jobs, Railway Jobs