ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு..

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு..

இந்தியன் ரயில்வே

இந்தியன் ரயில்வே

Railways job alert : இந்தியன் ரயில்வேவில் கலைஞர்களுக்கான கோட்டாவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தியன் ரயில்வேவின் தென் மேற்கு ரயில்வேவில் கலைஞர்களுக்கான கோட்டாவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது மற்றும் கல்வித்தகுதி என்ன என்பதை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

  பணியின் விவரங்கள்:

  கலை பிரிவுகாலிப்பணியிடம்
  Instrumental (Tabla)1
  Instrumental (Flute)1

  வயது வரம்பு:

  இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 18-30 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  இசை தகுதி:

  instrumental (Tabla/Flute) பிரிவில் டிகிரி/டிப்ளமோ/சான்றிதழ் படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

  கல்வித்தகுதி:

  12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 10 ஆம் வகுப்பு முடித்து ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  தேர்வு செய்யப்படும் முறை:

  எழுத்துத் தேர்வு மற்றும் திறமை சோதனை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் அதன் பின்னர் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.

  விண்ணப்பிக்கும் முறை:

  தென் மேற்கு இந்தியன் ரயில்வேவில் அதிகாரப்பூர்வ தளமான https://www.rrchubli.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக SC/ST/Ex-Servicemen,PwBDs,EBC பிரிவினருக்கு ரூ.250/- மற்றும் இதர பிரிவினருக்கு ரூ.500/- வசூலிக்கப்படும். கட்டணங்களை ஐஓபி மூலம் செலுத்த வேண்டும்.

  விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய : https://www.rrchubli.in/Application

  தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

  The Assistant Personnel Officer/Rectt., Railway Recruitment Cell, South

  Western Railway, 2nd Floor, Old GM’s Office Building, Club Road, Hubballi - 580023

  Also Read : பவர் கிர்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா-வில் 800 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?

  முக்கிய நாட்கள்:

  நிகழ்வுகள்தேதிகள்
  விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்19.11.2022
  விண்ணப்பிக்கக் கடைசி நாள்19.12.2022 மாலை 05.45 மணி வரை.

  மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Railway Jobs