ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் செவிலியர் பணி: நேர்முகத் தேர்வின் மூலம் நியமனம்!

கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் செவிலியர் பணி: நேர்முகத் தேர்வின் மூலம் நியமனம்!

செவிலியர்  பணி

செவிலியர் பணி

Cuddalore Staff Nurse Jobs: விண்ணப்பங்கள் நேரிலோ/ விரைவு தபாலிலோ (Speed Post) / மின்னஞ்சல் (Cuddalore.idhs@gmail.com) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore, India

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் மூலம் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வரும் Trauma Care திட்டங்களின் கீழ் செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்: 

பதவி: செவிலியர் (Staff Nurse)

கல்வித் தகுதி: Completed Diploma/ Degree in Nursing

with Computer knowledge

காலியிடங்கள் எண்ணிக்கை: 2

மாதச் சம்பளம் (ஒப்பந்த அடிப்படையில்) : ரூ. 14,000/-

இதையும் வாசிக்க: TNPSC: விரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்?

செவிலியர் பணிக்கான நிபந்தனைகள்:  

இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.  எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

பணியில் சேர்வதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Under taking ) அளிக்க வேண்டும்

நேர்முக தேர்வை மாற்றி அமைக்கவோ, ரத்து செய்யவோ மாவட்ட நலவாழ்வு சங்க தலைவருக்கு அதிகாரம் உண்டு.

விண்ணப்பங்கள் நேரிலேயோ/ விரைவு தபாலிலோ (Speed Post) / மின்னஞ்சல் (Cuddalore.idhs@gmail.com) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

இதையும் வாசிக்க: ரூ.70,000 வரை சம்பளம்.. சென்னை ஜார்ஜ் கோட்டையில் வேலை!

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:- 

உறுப்பினர் / இணை இயக்குநர்,

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலம், மாவட்ட நலவாழ்வு சங்கம், கடலூர் மாவட்டம்.

விண்ணப்ப படிவங்கள் கடலூர் இணையதளத்தில் (cuddalore.nic.in) பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் 03.01.2023 மாலை 5.45 மணி. அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

First published:

Tags: Nursing, Tamil Nadu Government Jobs