தொழிற் கல்வி படித்தவர்களுக்கு அப்ரெண்டிஸ்கள் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் வளாகம்(CSIR - Madras Complex) வெளியிட்டுள்ளது.
பணியிடம்: தொழில் நுணுக்கம் சார்ந்த அப்ரெண்டிஸ் (Technical Apprentice)
ஊதியம்: மாதம் ஒன்றுக்கு தோராயமாக ரூ.8000 வழங்கப்படும்.
கல்விக்கான தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவுகளில் பட்டய படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
வேலை நியமனத்தில் இடஒதுக்கீட்டுப் முறை பின்பற்றப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தகுதியான ஆவணங்களை காண்பித்து சலுகையினை பெறலாம்.
ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள், வரும் ஜூன் 27ம் தேதி நடைபெறும் நேரடி ஆட்தேர்வுக்கு (Walk-in-Interview) வரவேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிபரக் குறிப்பு, வயது, கல்வி, சாதி சான்றிதழ் தொடர்பான அசல் சான்றிதழ் மற்றும் நகலுடன் ஆட்தேர்வுக்கு வர வேண்டும்.
இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கான பணியாணை ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்படும். ஒப்பந்த காலம் ஓராண்டு ஆகும்.
விண்ணப்படிவம், தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை https://www.csircmc.res.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூடுதல் விபரங்கள்:
2020 முதல் 2022 கல்வியாண்டில் பட்டயப் படிப்பை முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி வாரியங்கள் (அல்லது) தேசிய அப்ரண்டிஸ் பயிற்சி திட்டத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அப்ரண்டில் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள்/பெற்று வருபவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பிக்கும் பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளுடன் நேர்காணல் தேர்வுக்கு வரவேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Apprentice job