திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களில் மத்திய காவல் ஆயுத படையில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்க கலெக்டர் விசாகன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மத்திய ஆயுத காவல் படை, தேசிய புலனாய்வு பிரிவு, சிறப்பு அதிரடி படை , அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
இந்த பணியில் சேருவதற்கு முன்னாள் படை வீரர்களுக்கு 10 சதவிகித ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், விருப்பமும் உள்ள முன்னாள் படை வீரர்கள் நேரடியாக https://ssc.nic.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 31 ஆகும். பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த முன்னாள் படை வீரர்கள் அதுகுறித்த விபரத்தை திண்டுக்கல் முன்னாள் படைவீரர் நல அலுவலகதத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.