Job Alert : சி.ஆர்.பி.எப் பாராமெடிக்கள் & கோல் இந்தியா லிமிடெட் நிறுவனங்களில் கொட்டிக்கிடக்கும் பணிகள்

வேலை

சி.ஆர்.பி.எப் பாராமெடிக்கள் & கோல் இந்தியா லிமிடெட் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலிப்பணியிட அறிவிப்பு நாளிதழில் வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

  • Share this:
    சி.ஆர்.பி.எப் பாராமெடிக்கள் பணியாளர் தேர்வாணையம் மூலம் அசாம் ரைபிள் மற்றும் சி.ஏ.பி.எப். படையில் பல்வேறு பணிப்பிரிவுகளில் 2439 பணி இடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    முன்னாள் ஆயுதப் படை வீரர்கள், ஓய்வு பெற்ற சி.ஆர்.பி.எப் வீரர்கள் ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 13-09-2021 முதல் 15-09-2021 வரை சி.ஆர்.பி.எப் மருத்துவமனைகளில் இதற்கான நேர்காணல் நடைபெறுகின்றது.

    வயது சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ் , பணி அனுபவ சான்றிதழ்,ஓய்வூதிய சான்றிதழ், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் நேர்காணலில் பங்கேற்கலாம்.



    தமிழகத்தில் ஆவடியில் உள்ள ஒருங்கிணைந்த சி.ஆர்.பி.எப் மருத்துவமனையில் இந்த நேர்காணல் நடைபெறுகின்றது. விண்ணப்ப நடைமுறை சார்ந்த விவரங்களை தெரிந்து கொள்ள இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

    மேலும் இந்தியா நிலக்கரி நிறுவனம் குறித்த அறிவிப்பும் நாளிதழில் வெளியாகி உள்ளது. கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் சுரங்கம் (253) எலக்ட்ரிக்கல் (117), மெக்கானிக்கல் (134)சிவில் (57), இண்டஸ்ட்ரீயல் இன்ஜினீரிங் (15) புவியியல் (12) உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பும் நாளிதழில் வெளியாகி உள்ளது.விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 











































    நிறுவனம் Coal India Limited
    பணியின் பெயர் Management Trainee
    காலிப்பணியிடங்கள்

    588

     

    Mining – 253 பணியிடங்கள்
    Electrical -117 பணியிடங்கள்
    Mechanical -134 பணியிடங்கள்
    Civil – 57 பணியிடங்கள்
    Industrial Engineering – 15 பணியிடங்கள்
    Geology -12 பணியிடங்கள்
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
    தேர்வு செய்யப்படும் முறை Graduate Aptitude Test in Engineering (GATE) –2021 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    வயது பதிவாளர்கள் 04.08.2021 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவராகவும் அதிகபட்சமாக 56 வயதிக்ரு மிகாமல் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
    கல்வி தகுதி

     Geology – Geology அல்லது Applied Geology அல்லது Geophysics அல்லது Applied Geophysics ஆகிய பாடங்களில் M.Sc./ M.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    மற்ற பிரிவுகள் – பணிக்கு தொடர்புடைய Engineering பாடப்பிரிவுகளில் BE/ B.Tech/ B.Sc. (Engg.) பட்டம் தேர்ச்சி
    விண்ணப்ப கட்டணம்

     

    General (UR)/ OBC (Creamy Layer & Non-Creamy Layer)/ EWS – ரூ.1,180/-

    SC / ST / PwD – கட்டணம் கிடையாது
    விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2021
    சம்பள விவரம்  குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை

     

    வேலைக்கு விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்


    அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிட விவரம்


    அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி விவரம்


    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.coalindia.in/career-cil/jobs-coal-india/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.coalindia.in/media/documents/Detailed_Advertisement_for_recruitment_of_MTs_through_GATE-2021_dt._09.08.2021.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: