நீங்க விளையாட்டு வீரரா? CRPF-இல் வேலை காத்திருக்கு…

மொத்தமுள்ள 359 பணியிடங்களில் ஆண்களுக்கு 314 இடங்களும், பெண்களுக்கு 45 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நீங்க விளையாட்டு வீரரா? CRPF-இல் வேலை காத்திருக்கு…
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: January 7, 2019, 9:19 PM IST
  • Share this:
மத்திய ரிசர்வ் காவல் படையில் (சி.ஆர்.பி.எஃப்.) கான்ஸ்டபிள் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் பணிக்கு 359 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்தப் பணியிடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. மொத்தமுள்ள 359 பணியிடங்களில் ஆண்களுக்கு 314 இடங்களும், பெண்களுக்கு 45 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயதுவரம்பு: 13/1/2019 நிலவரப்படி விண்ணப்பதாரர்கள் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.


கல்வித் தகுதி: மெட்ரிக்குலேஷன் (10-ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவர்கள் கான்ஸ்டபிள் பணிக்கும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் ஹெட் கான்ஸ்டபிள் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

ஆக்கி, கால்பந்து, கபடி, வில்வித்தை, தடகளம், பளு தூக்குதல், மல்யுத்தம், ஜூடோ, குத்துச் சண்டை, நீச்சல், கைப்பந்து, டேக்வாண்டோ, கராத்தே உள்ளிட்ட விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு விளையாட்டுப் பிரிவிலும் காலியாக உள்ள விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட விண்ணப்ப படிவத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து  குறிப்பிட்ட முகவரிக்கு 13-01-2019-க்குள் தபால் மூலமாக அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://www.crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_162_1_1423122018.pdf என்ற லிங்க்-ஐ பார்க்கவும்.இதற்கும் விண்ணப்பிக்கலாமே! https://tamil.news18.com/news/employment/isro-invites-applications-for-scientistsengineer-vacancies-87237.html

Also watch
First published: January 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்