முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு…

சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு…

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் 8 பிரிவுகளில் காலியாகவுள்ள 42 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எந்தெந்த பிரிவுகள்: கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 21 இடங்களும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 9 இடங்களும், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 5 இடங்களும், சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 2 இடங்களும், மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் 2 இடங்களும், மெட்டலர்ஜி, ஐ.டி. அன்ட் எஸ் பிரிவு மற்றும் சேஃப்டி ஆபிஸர் பிரிவுகளில் தலா 1 இடங்களும் காலியாக உள்ளன.

வயது வரம்பு: 2018 செப்டம்பர் 1 நிலவரப்படி விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 26-க்குள் இருக்க வேண்டும். எனினும், விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றவாறு பி.இ. அல்லது பி.டெக் படிப்பை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மனிதவள மேம்பாட்டுப் பிரிவுக்கு விண்ணப்பிப்போர் எம்.பி.ஏ. அல்லது முதுநிலை டிப்ளமா படித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: தகுதி வாய்ந்த நபர்கள் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கடைசி தேதி: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி அக்டோபர் 8. மேலும், விவரங்களுக்கு www.cpcl.co.in/Recruitment என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

First published:

Tags: BE graduates, CPCL Recruitment, Online application