ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNPSC : தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை பணியிடங்களுக்கான கலந்தாய்வு பட்டியல் வெளியீடு..

TNPSC : தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை பணியிடங்களுக்கான கலந்தாய்வு பட்டியல் வெளியீடு..

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

Assistant Section Officer counselling list : தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை பணியிடங்களுக்கான கலந்தாய்வு பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உதவி பிரிவு அலுவலகர் (மொழிபெயர்ப்பு) பதவிக்குத் தமிழ் 4 மற்றும் ஹிந்தி 1 என்று மொத்தம் 5 காலிப்பணியிடங்களுக்கான மூன்றாம் கட்ட மூலசான்றிதழ் மற்றும் கலந்தாய்வு பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

இப்பணிகளுக்கு 08.11.2019 அன்று அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து, 11.01.2022 அன்று தேர்வு நடைபெற்றது. அதற்கான முடிவுகள் கடந்த ஆண்டும் பிப்ரவரி மாதம் 25 ஆம் நாள் வெளியிடப்பட்டது. தேர்வில் தேர்வானவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன் அடுத்தகட்டமாக தற்போது அவர்களில் இருந்து கலந்தாய்வுக்கு 2 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் வருடம் ஜனவரி 6 ஆம் நாள் இவர்களுக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வானவர்கள்:

பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்களுக்குக் கலந்தாய்வுக்கான தகவல் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

Also Read : புதுக்கோட்டையில் டேட்டா எண்ட்ரி பணி - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கலந்தாய்வு பட்டியலை https://www.tnpsc.gov.in/ என்ற இணையத்தளத்தில் காணலாம்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs, TNPSC