ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத்துறையில் வேலைவாய்ப்பு! : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத்துறையில் வேலைவாய்ப்பு! : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத்துறையில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத்துறையில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத்துறையின்‌ கீழ்‌ இயங்கும் அரியலூர்‌ மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு Counsellor பணிக்கான வேலைவாய்ப்பு. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ariyalur, India

  தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ வாட்சாலயா வழிகாட்டுதல்‌ நெறிமுறைகளின்‌படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு இயங்கி வரும்‌, அரியலூர்‌ மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு ஆற்றுப்படுத்துநர்‌ (Counsellor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்ஆற்றுப்படுத்துநர்‌ (Counsellor)
  வயது வரம்பு40 வயதிற்குள் இருக்க வேண்டும்
  சம்பளம்ரூ.18.536/- தொகுப்பூதியம்
  கல்வி தகுதிஅரியலூர்‌ மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி / முதுநிலை பட்டதாரிகள்‌ (10+2+ 3 Pattern) (உளவியல்‌, சமூகவியல்‌, சமூகப்பணி, பொது சுகாதாரம்‌, வழிகாட்டுதல்‌ மற்றும்‌ ஆற்றுப்படுத்துதல்‌) படிப்பு முடித்தவர்களாக இருத்தல்‌ வேண்டும்‌. அல்லது முதுநிலை பட்டயப்படிப்பு (PG Diploma in counseling and communication)பட்டம்‌ பெற்றிருக்க வேண்டும்‌.
  அனுபவம்குழந்தைகள்‌ சார்ந்த ஆற்றுப்படுத்துதல்‌ பணியில்‌ 1 ஆண்டு (தொண்டு நிறுவனங்கள்‌, பள்ளிகள்‌, மருத்துவமனைகள்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ இல்லங்கள்‌) முன்‌ அனுபவம்‌ பெற்றிருக்க வேண்டும்.

  விண்ணப்பிக்கும் முறை:

  அரியலூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அறிவிக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

  விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டிய ஆண்லைன் முகவரி : https://ariyalur.nic.in 

  Also Read : சுயமாக தொழில் தொடங்க விரும்புகிறீர்களா..? உங்களுக்கான செய்திதான் இது..

  அனுப்ப வேண்டிய முகவரி : 

  மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம்‌, அரசு பல்துறை வளாகம்‌, ஜெயங்கொண்டம்‌ சாலை, அரியலூர்‌ – 621 704.

  விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.11.2022 மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Ariyalur, Tamil Nadu Government Jobs