சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கும் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணி 1 வருடக் கால ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. பட்டதாரி/ முதுகலை பட்டதாரி பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்:
பதவியின் விவரங்கள் | பணியிடம் | தொகுப்பூதியம் | வயது |
ஆற்றுப்படுத்துநர் (Counseller) | 1 | ரூ.18,536 | 18-40 |
கல்வித்தகுதி:
இப்பணிக்கு Social Work /Sociology/Psychology/ Public Health/ Counselling பாடங்களில் இளங்கலை /முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Counselling and Communication பிரிவில் முதுகலை டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். 1 வருட கால அனுபவம் தேவை.
Also Read : சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை... முதுகலைப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு https://cuddalore.nic.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து புகைப்படத்துடன் இணைத்துப் பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கச் செய்ய : https://cuddalore.nic.in/notice
தபால் முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
எண்.312, இரண்டாவது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர் - 607001.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 23.01.2023.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.