சென்னையில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் வேலைக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட சத்துணவு வழங்கும் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் ஆகிய 63 காலிப்பணியிடங்கள் நேரடி பணி நியமனத்தின் மூலம் நியமிக்கப்பட இருக்கின்றது.

சென்னையில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் வேலைக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு
கோப்புப் படம்
  • News18 Tamil
  • Last Updated: September 22, 2020, 7:36 PM IST
  • Share this:
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பெயரில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சமூக நலத் துறையால் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில், தற்போது சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படும் பள்ளிகளில் காலியாக இருக்கின்ற சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் நேரடி பணி நியமனத்தின் மூலம் நிரப்பப்பட இருக்கின்றது. சத்துணவு வழங்கப்படும் சிறுபான்மைப் பள்ளிகளில் 14 பணியிடங்களும் இதர பள்ளிகளில் 49 பணியிடங்களும் என மொத்தம் 63 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக சமூக நலத்துறை அறிவித்துள்ளது.

பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும் எனவும் அவர்களுக்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பழங்குடி பிரிவினர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயது மிகாமலும் இருக்க வேண்டும் என்றும் இதற்கான கல்வித் தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருந்தாலும் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாதச் சம்பளமாக சத்துணவு அமைப்பாளர்களுக்கு 7200 முதல் 24,200 ரூபாய் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
First published: September 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading