தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மாத இறுதிக்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் |
Consultant (Sports Performance Management) | 2 |
Consultant (Information Technology) | 1 |
Consultant (Social Media Management) | 1 |
Consultant (Accounts) | 2 |
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதார்களுக்கு 23 வயதில் இருந்து 40 வயது வரை இருக்க வேண்டும்.
அடிப்படைத் தகுதி:
தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். தொடர்பாடல் திறன், விளக்கத்திறன் மற்றும் MS Word, Excel திறன் போன்றவை தேவை.
கல்வித்தகுதி:
Consultant (Sports / Performance Management) பணிக்கு Sports Management பாடத்தில் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய மற்றும் உலக அளவிலான விளையாட்டுகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.
Consultant (Information Technology) பணிக்குத் தகவல் தொடர்பியலில் BE படித்திருக்க வேண்டும்.
Consultant (Accounts) பணிக்கு ICWA / CA / CA Inter உடன் B.Com படித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
இப்பணிகளுக்கு ரூ.30,000 முதல் ரூ.60,000/- வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களைத் தேர்வு செய்து நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
Also Read : இந்து சமய அறநிலையத்துறையில் 48 காலிப்பணியிடங்கள்..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு https://www.sdat.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து இமெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்படிவத்துடன் சம்பளம் விவரம், ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் கடைசி 3 ஆண்டுகள் வருமான வரி பதிவு செய்த தகவல்களுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
இமெயில் முகவரி : hr.sportstn@gmail.com
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://www.sdat.tn.gov.in/
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022 மாலை 5 மணி வரை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, Tamil Nadu Government Jobs, Tamil Nadu Sports Development Authority