மத்திய அரசின் நிறுவனமான நேஷனல் லேன்ட் மொநெட்டிசேசன் கார்பேரேஷன் ( National Land Monetization Corporation ) புதிதாக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியில் விவரங்களை இதில் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.
பணியின் விவரங்கள்:
பணியின் பெயர் | காலிப்பணியிடங்கள் | ஊர் |
Consultant | 3 | டெல்லி |
Young Professional | 4 | டெல்லி |
Consultant பணியின் விவரங்கள் :
பணியின் பிரிவு | சம்பளம் | கல்வித்தகுதி |
Finance | ரூ.1,20,000/- | CA முடித்திருக்க வேண்டும் மற்றும் ICAI-இல் பதிவு செய்திருக்க வேண்டும். |
Accounts | ரூ. 1,00,000/- | சட்டப்படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Legal Asset Monetization | ரூ.1,20,000/- | ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Young Professional பணிக்கான விவரங்கள்:
4 பிரிவுகளில் பணிபுரியத் தற்காலிக அடிப்படையில் இளைஞர்கள் வரவேற்கப்படுகின்றனர்.
கல்வித்தகுதி:
MBA-வுடன் சிவில் இன்ஜீனியரிங்க், CA-வுடன் finance பாடத்தில் முதுகலை, முதுகலை பட்டப்படிப்பு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
இப்பணிக்குத் தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் https://dpe.gov.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைத் தபால் மூலம் அனுப்பலாம் அல்லது நேரில் சென்றும் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.500 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய : Consultant விண்ணப்பம் / Young Professional விண்ணப்பம்.
மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி : am-nlmc@gov.in
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
The CEO, National
Land Monetization Corporation, Room no. 401, Block no.14, CGO Complex, New Delhi –
110003.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 02.12.2022.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs, Jobs