ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் 787 காலிப்பணியிடங்கள்..10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் 787 காலிப்பணியிடங்கள்..10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை

Central Govt job alert : மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் Constable/Tradesmen பணிகளில் உள்ள 787 காலிப்பணியிடங்களுக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் (CISF) Constable/Tradesmen பிரிவில் இந்தியா முழுவதும் பல்வேறு பணியில் காலியாகவுள்ள 787 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் ராணுவ வீரர்களும் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முழு விவரங்களை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

  பணியின் விவரங்கள்:

  பதவியின் பெயர்ஆண்பெண்மு.ராணுவ வீரர்மொத்தம்
  Const/Cook2472730304
  Const/Cobbler4116
  Const/Tailor222327
  Const/Barber83910102
  Const/Washer-man951112118
  Const/Sweeper1611820199
  Const/Painter1012
  Const/Mason101112
  Const/Plumber4004
  Const/Mali3003
  Const/Welder3003
  Back - log vacanies
  Const/Cobbler1001
  Const/Barber7007
  மொத்தம்6416977787

  சம்பளம்:

  இப்பணிக்குச் சம்பளமாக ரூ. 21,700 முதல் 69,100 வரை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  வயது வரம்பு:

  இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு குறைந்தபட்சம் 18 இருந்து 23 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணவும்.

  கல்வித்தகுதி:

  மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை பணிகளுக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான கல்வி பெற்றிருக்க வேண்டும். மேலும் பிரிவுக்கு ஏற்ற தொழிற்பயிற்சி பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

  தேர்வு செய்யப்படும் முறை:

  மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, Physical standard Test(PST),Physical Efficiency Test(PET),சான்றிதழ் சரிபார்ப்பு,பணிக்காகத் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைக்குப் பின்பு தேர்வு செய்யப்படுவர்.

  Also Read : சென்னை அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு... சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!

  விண்ணப்பிக்கும் முறை:

  இப்பணிகளுக்கு CISF அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி: https://www.cisfrectt.in/recruitment

  முக்கிய நாட்கள்:

  ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் நாள் : 21.11.2022

  ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 20.12.2022

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Jobs