கணினி ஆசிரியர்: புதிய தேர்வு பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

ஆசிரியர் தேர்வு வாரியம்

மூன்று தேர்வு மையங்களை தவிர்த்து மற்ற தேர்வு மையங்களில் தேர்வு எழுதி, தேர்சிபெற்ற தேர்வர்களின் புதிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

 • Share this:
  கணினி ஆசிரியர் பணிக்கு தேர்வாணவர்களின் புதிய தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

  814 கணினி ஆசிரியர் பணி நியமனத்திற்கான தேர்வினை ஆன்-லைன் வழியில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 119 தேர்வு மையங்களில் நடத்தியது. தேர்வு சமயத்தில் பல்வேறு தேர்வு மையங்களில் குளறுபடிகள் ஏற்பட்டதன் காரணமாக தேர்வு முறையாக நடக்கவில்லை என குற்றச்சாட்டு தேர்வுகளால் முன்வைக்கப்பட்டது அது தொடர்பான வீடியோ ஆதாரங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

  இது குறித்து, தேர்வர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கினை விசாரித்த நீதிமன்றம் திருச்சி, கும்பகோணம் திருச்செங்கோடு ஆகிய மூன்று தேர்வு மையங்களில் மட்டும் நடைபெற்ற குளறுபடிகள் குறித்த விசாரிக்க நீதியரசர் ஆதிநாதன் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  இந்நிலையில், மூன்று தேர்வு மையங்களை தவிர்த்து மற்ற தேர்வு மையங்களில் தேர்வு எழுதி, தேர்சிபெற்ற தேர்வர்களின் புதிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் தேதி கணினி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது, நீதிமன்ற உத்தரவையடுத்து ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்வு பட்டியல் ரத்து செய்யப்பட்டு 742நபர்களின் புதிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

  நிரப்பப்படாமல் எஞ்சியிருக்கும் இடங்கள் நீதியரசர் ஆதிநாதன் விசாரணை முடிந்து அவர் அளிக்கும் அறிக்கையின்படி தேர்வு பட்டியலை வெளியிடுவதா அல்லது 3மையங்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்துவதா என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்யும்.
  Published by:Suresh V
  First published: