Home /News /employment /

கடந்த 7 ஆண்டுகளில் மத்திய அரசுப் பணிகளில் நியமன விகிதம் 0.3% மட்டுமே - மத்திய அமைச்சர் ஜிக்கேந்திர சிங்

கடந்த 7 ஆண்டுகளில் மத்திய அரசுப் பணிகளில் நியமன விகிதம் 0.3% மட்டுமே - மத்திய அமைச்சர் ஜிக்கேந்திர சிங்

காட்சிப் படம்

காட்சிப் படம்

கடந்த 2018 -19 ஆண்டில், ஒவ்வொரு காலியிடங்களுக்குக்கும் 1,337 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன  (application Rate). அதேசமயம், ஆட்சேர்ப்பு விகிதம் (Selection Rate ) வெறும் 0.07% ஆக உள்ளது

கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை  மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 22 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பித்ததாகவும், அதில் 7 லட்சம் பேர் வேலை பெற்றதாகவும் பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிக்கேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மக்களவை கேள்வி நேரத்தின் போது  தெலுங்கானா காங்கிரஸ் உறுப்பினர் கேள்வி ஒன்றை எழுப்பினார். "கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரந்தர வேலை பெற்றவர்கள் தொடர்பான தகவல்கள்;  கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசின் பல்வேறு துறைகளின் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்கள்; நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள்"  ஆகியவற்றிற்கு பதில்கள் கோரப்பட்டன.

கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரந்தர வேலை பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். மக்களவையில் இந்த கேள்விக்கு எழுத்து பூர்வமாக பதிலளித்த மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் , "கடந்த 2014 ம் ஆண்டிலிருந்து மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 7,22,000-க்கும் மேற்பட்டவர்கள் நிரந்தர வேலை பெற்றுள்ளனர்.











































கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட    ஆண்டு மொத்த நிரந்தர வேலை 
2014-151,30,423
2015-161,11,807
2016-171,01,333
2017-1876,147
2018-1938,100
2019-201,47,096
2020-2178,555
2021-2238,850
TOTAL (2014-22)7,22,311

அதேபோன்று, கடந்த 2014ம் ஆண்டிலிருந்து தற்போது வரை மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு கிட்டத்தட்ட 22 கோடிக்கும்  (22,05,99,238) அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.











































கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட    ஆண்டு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 
2014-152,32,22,083
2015-162,95,51,844
2016-172,28,99,612
2017-183,94,76,878
2018-195,09,36,479
2019-201,78,39,752
2020-211,80,01,469
2021-221,86,71,121
மொத்தம் (2014-22)22,05,99,238

21-35 வயதுக்குட்பட்டவர்களில் 65%க்கும் அதிகமானோர், தனியார் துறைகளை விட அரசு பணிகளுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதாக Lokniti-CSDS-KAS Youth Survey 2016 ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2018 -19 ஆண்டில், ஒவ்வொரு காலியிடங்களுக்குக்கும் 1,337 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன  (application Rate). அதேசமயம், நியமன விகிதம் (Selection Rate ) வெறும் 0.07% ஆக உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 0.3% ஆகும். அதாவது, 2014ம் ஆண்டில் இருந்து தற்போது வரை பெற்ற மொத்த விண்ணப்பங்களில் 0.3% விண்ணப்பங்கள் மட்டுமே நிரந்தர வேலைக்கு தேந்தெடுக்கப்பட்டுள்ளனர்.    

உலகளவில் ஆட்சேர்ப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது  காணப்படுகிறது. மக்கள் தொகை அடர்த்தி, அரசு வேலை தரும் பாதுகாப்பு, தனியார் துறையில் மீதான தயக்கம் போன்ற பல்வேறு காரணங்கள் முக்கிய காரணமாக இருந்தாலும், மிகக் கடினமான  ஆட்சேர்ப்பு நடைமுறையை இந்தியா கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள்  தெரிவிக்கின்றனர்.

நாட்டின் மொத்த பணியாளர்களில், அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமாக இருந்தாலும், அரசின் ஆட்சேர்ப்பு நடைமுறை தொழிலாளர் சந்தையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. உதாரணாமாக, அரசு ஆட்சேர்ப்பு நடவடிக்கை சமூகத்தின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்புகளை  உருவாக்குவதற்கான  விகிதத்தை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எடுத்துக்காட்டாக , 2001 முதல் 2006 வரையிலான  காலத்தில்  ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தற்காலிகமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிறுத்தி வைத்தது. இந்த கால இடைவெளியில் பட்டம் பெற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு விகிதம் முந்தைய ஆண்டுகளை விட ஒப்பீட்டளவில் குறைவாக இருந்ததாக  ஆய்வு தெரிவிக்கிறது.

இதையும் வாசிக்க : Education Series 2: எந்த துறையில் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் உள்ளன

மேலும், தேர்வுக்கு தொடர்ச்சியாக படிப்பவர்கள் மற்ற தனியார் துறைகளில் அதிக அளவு சம்பளத்துடன் பணி அமர்த்தப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  மேலும், பெற்றோருடன் சேர்ந்து வாழும் முறை, காலதாமத திருமணம், மேற்படிப்பு போன்ற சமூக மட்டத்திலும் அரசு பணி நியமனங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. 

எனவே, அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை  கொள்குறி வகை வினாக்களோடு மட்டும் நின்றுவிடமால், மாற்று சிந்தனைகள்  மற்றும் அளவீடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவைகளும் உள்ளது.

12-ஆம் ஐந்தாண்டுத் திட்டம் (2012-17) இந்தியத் தொழிலாளர்களில் 62% பேர் 19-24 வயதுக்குட்பட்வர்கள் என்று மதிப்பிடுகிறது. இதில் 5%க்கும் குறைவானோர் மட்டுமே முறையான செய்தொழிற் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 56% என்றும், ஜெர்மனியில் 75% என்றும், தென் கொரியாவில் 96% என்றும் மதிப்பிடப்படுகிறது. 

Education Series 1: Education Series 1: பொறியியல் படிப்புகளின் இன்றைய நிலை என்ன?

எனவே, அரசு துறைகளில் பயிற்சி பெற்ற அப்ரெண்டிஸ்கள் (தொழிற் பயிற்சி பெறுபவர்கள்) கொண்டும், உள்ளூர் மட்டத்தில்  ஓராண்டு கால வேலைத்திட்டத்தின் மூலம் (1 Year fellowship) மூலம் பணி நியமனத்தை உறுதி செய்வது போன்ற  முன்னெடுப்புகளும் இங்கு அவசியமாகிறது.
Published by:Salanraj R
First published:

Tags: Education, Recruitment

அடுத்த செய்தி