Home /News /employment /

SSC CHSLE Tier II: ஒருங்கிணைந்த 10, +2 அளவிலான இரண்டாம் கட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு

SSC CHSLE Tier II: ஒருங்கிணைந்த 10, +2 அளவிலான இரண்டாம் கட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு

மாதிரி படம்

மாதிரி படம்

விண்ணப்பதாரர்கள் PDF முறையில் தங்கள் தேர்வு முடிவுகளை சேமித்து வைக்க கொள்ளலாம்.   

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    2020, ஒருங்கிணைந்த மேல்நிலை கல்வி (10, +2) அளவிலான (பிரிவு-II)  தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.  

    முதற்கட்ட தேர்வு, கடந்தண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட தேர்வு 2022, ஜனவரி 9ம் தேதி நடைபெற்று முடிந்தது. இரண்டாம் கட்டத் தேர்வில் நாடு முழுவதும்  45,480 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    விண்ணப்பதாரர்கள், நிலை I மற்றும் II தேர்வில் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவு உள்ளிடும் திறனறிவு தேர்வுக்கு (Data Entry Skill Test ) தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் 28,133 விண்ணப்பதாரர்கள் திறனறிவு தேர்வு எழுதவிருக்கிறார்கள் 

    திறனறிவு தேர்வு அட்டவணை, உரிய நேரத்தில் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படும். இது தொடர்பான தகவல்களுக்கு ஆணையத்தின் இணையதளத்தை (https://ssc.nic.in) பார்வையிடுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    தேர்வு முடிவுகள்: 

    இரண்டாம் நிலை தேர்வு முடிவுகளை காண,

    விண்ணப்பதாரர்கள், பணியாளர்  ஆணையத்தின் https://ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

    முகப்பு பக்கத்தில்,  Combined Higher Secondary (10+2) Level Examination (CHSLE), 2020 (Tier-II): Declaration of the Result for shortlisting the candidates to appear in DEST/Typing Test’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

    தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.

    எதிர்கால பயன்பாட்டிற்காக, விண்ணப்பதாரர்கள் PDF முறையில் தங்கள் தேர்வு முடிவுகளை சேமித்து வைக்க கொள்ளலாம்.

    பொது அறிவிப்பு: 

    தேர்வு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் சரிபார்க்கப்படும் வரை இந்த விண்ணப்பதாரர்களின் தேர்வு தற்காலிகமானது ஆகும். நேர்காணல்/ஆளுமைத் தேர்வின் போது வயது/வயது தளர்வு/பிறந்த தேதி, கல்வித் தகுதிகள், சமூக இடஒதுக்கீடு, உடல் குறைபாடு (பொருந்தினால்) போன்றவை தொடர்பான அசல் சான்றிதழ்களை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: SSC

    அடுத்த செய்தி