கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் உள்ளிட்ட குரூப்3 ஏ பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
காலியிடங்கள்: 15
பதவியின் விவரம்:
கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், கூட்டுறவுத் துறை: 14
பண்டக காப்பாளர், நிலை - II, தொழில் மற்றும் வர்த்தக துறை : 1
சம்பள ஏற்ற முறை: 20,600 –75,900 (நிலை-10)
முக்கியமான நாட்கள்:
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள்: 14.10.2022
எழுத்துத் தேர்வு நடைபெறு நாள்: 28.01.2023
கல்வித் தகுதி:
கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவு விண்ணப்பதாரர்கள், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதர வகுப்பினர் 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றால் போதுமானது.
பண்டக காப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
தேர்வுக் கட்டணம்: ரூ. 100; நிரந்தர பதிவுக் கட்டணம் : ரூ.150
ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பதாரர் நிர்ணயக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்துடன் குறித்த நேரத்திற்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவில்லை என்றால், விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பிறகு நிராகரிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தெரிவு முறை:
பகுதி 'அ' குறைந்தபட்சம் 60 மதிப்பெண் எடுக்க வேண்டும். இல்லையென்றால் தேர்வர்களின் பகுதி 'ஆ' மதிப்பெண் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது.
பகுதி 'அ' மற்றும் 'ஆ' வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி உத்தேசப் பட்டியல் தயாரிக்கப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி? tnpsc.gov.in, tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Combined Civil Services Examination-III (Group-III.A Services)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TNPSC