ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

வேலை தேடுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. கோவையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வேலை தேடுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. கோவையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Private Job Openings: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு, தொழில் கல்வி பயின்றவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore |

    கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் வரும் 27ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை ஏற்பாடு செய்துள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், புதிய வாய்ப்புகளுக்கு காத்திருக்கும் இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்: 27.11.2022 (ஞாயிற்றுக் கிழமை )

    இடம்: மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, பொள்ளாச்சி.

    இந்த கல்லூரி கோயம்புத்தூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொல்லாச்சி வட்டத்தில்  அமைந்துள்ளது.

    பங்குபெறும் நிறுவனங்கள் :  உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி துறை(தகவல் துறை), ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள். 

    இதையும் வாசிக்க: பொறியியல் கலந்தாய்வில் 60 ஆயிரம் காலியிடங்கள்: எங்கு பிரச்னை? என்ன தீர்வு

    காலியிடங்கள்: 15,000 க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்கள் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்புகள் அளிக்கும் நிறுவனங்கள் இதில் கலந்து கொள்ளவிருப்பதால், வேலைத் தேடும் பெண்களுக்கு இது நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

    தகுதி: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு, தொழில் கல்வி பயின்றவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுயவிவரக் குறிப்புடன் (Bio-Data) நேரில் வருகைப்புரிய வேண்டும்.

    மேலும், இம்முகாமில் வருகைப்புரியும் விண்ணப்பதாரர்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பபங்கள்  தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் , அரசு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் கூடுதலாக பதிவு செய்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Salanraj R
    First published:

    Tags: Tamil Nadu Government Jobs