ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: ரூ.62,000 மாத சம்பளத்தில் அரசு வேலை!

எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: ரூ.62,000 மாத சம்பளத்தில் அரசு வேலை!

மாதிரி படம்

மாதிரி படம்

Coimbatore District Job Recruitment :தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 05.12.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோயம்புத்தூர் மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு துறையில் ஜீப்பு ஒட்டுநர், இரவுக்காவலர் பதவிக்கான விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன.

  ஜீப்பு ஒட்டுநர் பதவி:  

  காலியிடங்கள்: 3

  8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

  மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் படி தமிழக அரசின் தகுந்த அதிகாரியால் வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

  01.07.2022 அன்று, பொது பிரிவு விண்ணப்பதாரர் வயது வரம்பு 18-32க்குள் இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் சீர்மரபினரின் வயது வரம்பு 18-34க்குள் இருக்க வேண்டும்.  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 18-42க்குள் இருக்க வேண்டும்.

  ஊதிய விவரம்: ரூ. 19500 முதல் 62000 வரை

  இரவுக்காவலர் பதவி:

  எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

  காலியிடங்கள் - 5

  01.07.2022 அன்று, பொது பிரிவு விண்ணப்பதாரர் வயது வரம்பு 18-32க்குள் இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் சீர்மரபினரின் வயது வரம்பு 18-34க்குள் இருக்க வேண்டும்.  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 18-37க்குள் இருக்க வேண்டும்.

  இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பம் செய்வது எப்படி?

  தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 05.12.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)

  மாவட்ட ஆட்சியர் வளாகம்

  கோயம்புத்தூர் – 641018.

  இதையும் வாசிக்க: ஆயத்த ஆடை தொழிலில் விருப்பமா? ரூ.3 லட்சம் வரை மானியம்- விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?

  விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, இருப்பிடம், சாதிச் சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

  இதையும் வாசிக்க: 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்: மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்

  இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

   சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை-1 (10×4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

  மேலும், விவரங்களுக்கு:

  Night Watchman Post: Notification 

  Jeep Driver Post: Notification

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job vacancies, Recruitment