ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

அரசு மருத்துவமனையில் உதவியாளர் பணி - 10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்.. தேர்வு இல்லாமல் நேரடி நியமனம்

அரசு மருத்துவமனையில் உதவியாளர் பணி - 10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்.. தேர்வு இல்லாமல் நேரடி நியமனம்

காட்சிப்படம்

காட்சிப்படம்

Coimbatore District Job alerts: இப்பணிகளுக்கான நேர்முகத் தேர்வு 2 தேதி காலை 10.00 மணிக்கு துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப  நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பல் மருத்துவ அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  காலியிடங்கள் விவரம்:

  பதவியின் பெயர்மாத சம்பளம்எண்ணிக்கை
  பல் மருத்துவ அலுவலர்  (Dental Surgeon)ரூ.34,000/8
  பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant)ரூ. 13,800/7

  பல் மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கு குறைந்தபட்சம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bds பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், Tamil Nadu Dental Council -ல் பதிவு செய்திருக்க வேண்டும்.

  பல் மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  வயது வரம்பு: இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 35 -ற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியான நபர் பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்டசான்றிதழ்களின் நகல்களை இணைத்து 05.12 2022அன்றுமாலை 5.00 மணிக்குள் பந்தையசாலையில் உள்ள துணை இயக்குநர்: சுகாதாரபணிகள் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்.

  இப்பணிகளுக்கான நேர்முகத் தேர்வு 2 தேதி காலை 10.00 மணிக்கு துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Tamil Nadu Government Jobs