ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

+2 பாஸ் ஆனாலே போதும்.. குழந்தைகள் நலக்குழுமத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணி!

+2 பாஸ் ஆனாலே போதும்.. குழந்தைகள் நலக்குழுமத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணி!

காட்சிப் படம்

காட்சிப் படம்

Coimbatore District Data Entry Operator Posts: கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 10.11.2022 அன்று 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர்  ( temporary vacancy of Assistant cum Data Entry Operator post on purely Contract basis ) பணியிடத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

  முக்கியமான நாட்கள்:

  விண்ணப்பம் தொடங்கும் தேதி: 20/10/2022

  விண்ணப்பம் முடிவுறும் தேதி: 10/11/2022

  விவரங்கள்:  உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) பணியிடத்திற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு (DCA) முடித்திருக்க வேண்டும். கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 10.11.2022 அன்று 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

  இதையும் வாசிக்கஇந்திய ரயில்வே துறையில் 3115 காலி பணியிடங்கள்; 8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்

  தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 10.11.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களை https://Coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  இதையும் வாசிக்க: மகளிர் தனிச்சிறையில் வேலை வாய்ப்பு; ஆர்முள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

  விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்; மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்; 2வது தளம், பழைய கட்டிடம்; மாவட்ட ஆட்சியர் வளாகம்; கோயம்புத்தூர் – 641 018.

  Coimbatore District Application for the Post of Assistant cum Data Entry Operator

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job Vacancy, Recruitment