ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ஊர்காவல் படை ஆள்சேர்ப்பு: கோவை மாநகர காவல்துறை அறிவிப்பு

ஊர்காவல் படை ஆள்சேர்ப்பு: கோவை மாநகர காவல்துறை அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

Coimbatore Home Guard Appointment: விண்ணப்பங்களை கோவை, காந்திபுரம் சி-1 காட்டூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள கோவை மாநகர ஊர்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோவை மாநகர ஊர்காவல் படையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப ஊர்காவல்படை தேர்வு நடத்தப்படவுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கல்வித் தகுதிபத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற/ பெறாத ஆண்கள், பெண்கள், மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள்
  வயது வரம்பு20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும்
  விண்ணப்பிக்க கடைசி நாள்25.10.2022

  விண்ணப்பங்களை கோவை, காந்திபுரம் சி-1 காட்டூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள கோவை மாநகர ஊர்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

  மேலும் விவரங்களுக்கு 9498171293, 9942346806,9498172525 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

  இதையும் வாசிக்கசைக்கிள் ஓட்ட தெரியுமா? ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை

  ஊர்க்காவல் படை என்றால் என்ன?  

  இந்தியக் காவல் துறைக்கு துணையாக செயல்படும் தன்னார்வப் படையாகும்.[1] இந்திய - சீனா போருக்குப் பின்னர் இந்தியக் காவல்துறைக்கு உதவிட 1962-இல் ஊர் காவல் படை அமைப்பு நிறுவப்பட்டது

  தமிழ்நாட்டில், ஊர்க்காவல் படையின் சட்டம் 1963 பிரிவு 7ல் காவல் துறையினருக்கு இணையான பொறுப்பும், அதிகாரம் ஊர்க்காவல் படையினருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. காவல் துறையில் தன்னார்வத் தொண்டாக பணியாற்றும் ஊர்க்காவல் படையினர், காவலர்களின் அனைத்து பணிகளையும் அதாவது வாகனம் ஓட்டுவது, போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவது, இரவு ரோந்துப் பணிகள், பாதுகாப்புப் பணிகள் விஐபிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது, தேர்தல் கால பணிகள், நீதிமன்ற வழக்குகளுக்கு ஆஜராவது போன்ற காவல்துறையினர் செய்யும் அனைத்து பணிகளையும் ஊர்க்காவல் படையினரும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job Vacancy, Recruitment