Home /News /employment /

கூட்டுறவு வங்கியில் நேரடி வேலை என பரவும் போலி அறிக்கை - பதிவாளர் எச்சரிக்கை

கூட்டுறவு வங்கியில் நேரடி வேலை என பரவும் போலி அறிக்கை - பதிவாளர் எச்சரிக்கை

கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம்

கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம்

Co Operative Banks : கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் என வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்பட்டு வரும் பொய்யான தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் - கூட்டுறவுச் சங்க பதிவாளர் எச்சரிக்கை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் என போலி அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இதனை நம்ப வேண்டாம் எனவும் கூட்டுறவுச் சங்க பதிவாளர் தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் என்ற செய்தி  21.08.2022  தேதி தினசரி நாளிதழில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கீழ்க்காணும் மறுப்பு அறிக்கை வெளியிடப்படுகிறது. மாநில ஆட்சேர்ப்பு மைய விளம்பர எண் 1/2022  நாள் 18.08.2022 தேதி அறிவிக்கை போலியாக வெளியிடப்பட்டுள்ளது. இவ்விளம்பரத்தில் தலைமை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என்றும் இதற்காக விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்தகைய  விளம்பரம் ஏதும் மாநில ஆள்சேர்ப்பு மையத்தால் அதிகாரபூர்வமாக  வெளியிடப்படவில்லை எனவே மேற்கண்ட போலி விளம்பரத்தை பார்த்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    ALSO READ | குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000.. புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு

    இது தொடர்பாக செய்தி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பரவி வருகிறது. எனவே வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்பட்டு வரும் பொய்யான தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும் இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது காவல் துறை மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Crime News, Job Vacancy

    அடுத்த செய்தி