சென்னையிலுள்ள CLRI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: டிச. 14-இல் இன்டர்வியூ

பணியிடத்துக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். பி.இ., பி.டெக்., எம்.டெக்., எம்.பி.ஏ. எம்.எஸ்.சி. படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது.

சென்னையிலுள்ள CLRI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: டிச. 14-இல் இன்டர்வியூ
டிசம்பர் 14-இல் நேர்காணல்
  • News18
  • Last Updated: December 8, 2018, 8:10 PM IST
  • Share this:
சென்னையிலுள்ள மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் (Central Leather Research Institute – CLRI) காலியாகவுள்ள 13 பணியிடங்களை நிரப்புவதற்காக டிசம்பர் 14-ம் தேதி நேரடி நேர்காணல் நடைபெறவுள்ளது.

காலியிட விவரம்: சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ, ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ, புராஜெக்ட் அசிஸ்டென்ட் (திட்ட உதவியாளர் – கிரேடு 1,2,3) என 13 பணியிடங்கள் உள்ளன.

வயதுவரம்பு: பணியிடத்துக்கு ஏற்ப வயதுவரம்பு மாறுபடும். பொதுவாக விண்ணப்பதாரர்கள் 28 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.


கல்வித் தகுதி: பணியிடத்துக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். பி.இ., பி.டெக்., எம்.டெக்., எம்.பி.ஏ. எம்.எஸ்.சி. படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது.

நேர்காணல்: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் சென்னையிலுள்ள மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் டிசம்பர் 14-ம் தேதி நடைபெறும் நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம்.

ஊதியம், விருப்ப தகுதி, பிற நிபந்தனைகள் உள்ளிட்ட பிற விவரங்களை அறிந்துகொள்ள https://www.clri.org/WriteReadData/Opportunity/331273590Notification13-2018_homhf.pdf, https://www.clri.org ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.Also watch

First published: December 8, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading