CIVIL SERVICES (PRELIMINARY) EXAMINATION 2022: இந்தியக் குடியியல் பணிகள் (முதல்நிலை) தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
தேர்வர்கள் http://www.upsc.gov.in என்ற இணைய தளத்தில் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் நாடு முழுவதும், முதல்நிலை தேர்வை யுபிஎஸ்சி நடத்தியது. 11.52 லட்சம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். தேர்வு முடிந்து வெறும் 17 நாட்களுக்கு தேர்வு முடிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாக 40 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்க: CUET UG Exam Date: கியூட் நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு
இந்தாண்டு, 13,090 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் கட்டாயம் DAF form என்று சொல்லப்படக் கூடிய விரிவான விண்ணப்பப்படிவம் மூலம் முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்கள் நிரப்புவதற்கான தேதிகள்,பூர்த்தி செய்வதற்கான முக்கியமான அறிவுறுத்தல்கள் இணையதளத்தில் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.
இதையும் வாசிக்க: சைனிக் பள்ளிகளில் 2-ம் சுற்று ஆன்லைன் கவுன்சிலிங் தொடக்கம்
ஒட்டுமொத்த தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் நிறைவடைந்த பின்னர், தேர்வர்களின் தனிப்பட்ட மதிப்பெண், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் விடைத்தாள் ஆகியவை தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
மேலும் தகவல்களுக்கு, யுபிஎஸ்சி ‘சி’ நுழைவு வாயில் அருகேயுள்ள உதவி மையத்தை நேரடியாகவும், 011-23385271/011-23381125 / 011-23098543 என்ற போன் எண்களிலும், வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: UPSC