ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

UPSC Main Results: சிவில் சர்விஸ் எழுத்து தேர்வு முடிவுகள் வெளியானது.. தேர்ச்சி பெற்றவர்கள் முழு பட்டியல் இதோ

UPSC Main Results: சிவில் சர்விஸ் எழுத்து தேர்வு முடிவுகள் வெளியானது.. தேர்ச்சி பெற்றவர்கள் முழு பட்டியல் இதோ

குடிமைப் பணித் தேர்வுகள்

குடிமைப் பணித் தேர்வுகள்

UPSC Main Results:முதன்மை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில்  இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.    

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |

சிவில் சர்வீஸஸ் முதன்மை எழுத்து தேர்வு 2022 முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்விஸ் முதல்நிலைத் தேர்வு (  (PRELIMINARY EXAMINATION), 2022, ஜூன் 5ம் தேதி நடைபெற்றது. இதில், தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்துத் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்.

முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் 16 முதல் 25ம் தேதி வரை நடைபெற்றது.கிட்டத்தட்ட 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த எழுத்துத் தேர்வுக்கான தேர்வு முடிவுகளை யூபிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது.

இதில், தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் நேர்காணல் தேர்விற்கு அழைக்கப்படுவர். முதன்மை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில்  இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

UPSC Main Examination Results :

முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகளை upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.

தேர்ச்சி பெற்றவர்கள் முழு விவரத்தை பாரக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

First published:

Tags: UPSC