Home /News /employment /

யுபிஎஸ்சி முதன்மை தேர்வு செப்டம்பர் 16-ல் தொடக்கம் : ஹால் டிக்கெட் வெளியீடு

யுபிஎஸ்சி முதன்மை தேர்வு செப்டம்பர் 16-ல் தொடக்கம் : ஹால் டிக்கெட் வெளியீடு

 தேர்வு

தேர்வு

அனுமதிச் சீட்டை தேர்வர்கள் www.upsc.gov.in மற்றும் www.upsconline.in ஆகிய தளங்களில் இருந்து  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |
    CIVIL SERVICES (MAIN) EXAMINATION, 2022:  செப்டம்பர் 16 முதல் 25 வரை நடைபெறும் யுபிஎஸ்சி குடிமைப் பணிகளுக்கான (முதன்மை) தேர்வு  அனுமதிச் சீட்டு வெளியாகியுள்ளது.

    இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவலர் பணி, இந்திய வனப்பணி உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.

    முதல் நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் தேர்வு ஆகிய மூன்று தேர்வுகளின் மூலம் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். கொள்குறி வகையாக நடத்தப்படும் முதல் நிலைத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி செய்யப்படுகின்றனர்.

    2022 குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜுன் மாதம் 6ம் தேதி நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் அம்மாதம் 23ம் தேதி வெளியிடப்பட்டன.

    இதில்,  தேர்ச்சி பெற்றவர்களுக்கான  முதன்மைத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 16,17,18,24,25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான அனுமதிச் சீட்டை தேர்வர்கள் www.upsc.gov.in மற்றும் www.upsconline.in ஆகிய தளங்களில் இருந்து  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    தாய்மொழி, ஆங்கிலம் என ஒன்பது தாள்களை உள்ளடக்கியது முதன்மைத் தேர்வு. 1750 மதிப்பெண்களுக்கு இந்த எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில், தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணல் தேர்வுக்குத் தகுதி பெறுவார்கள். நேர்காணல் தேர்வு 275 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

    முதன்மை (Mains Examination) தேர்விலும், நேர்முகத் தேர்விலும் (Personality Interview) பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். முதல்நிலைத் தேர்வு, வெறும் தகுதி தேர்வாக இருப்பதால், இதில் பெறும் மதிப்பெண்கள் இறுதி மதிப்பெண் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

    இதையும் வாசிக்கஅரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக ஒழிக்க முயல்வதா? அன்புமணி ராமதாஸ்

    அனுமதிச் சீட்டு தொடர்பாக கூடுதல் விளக்கம்  வேண்டுவோர், யுபிஎஸ்சி ‘சி’ நுழைவு வாயில் அருகேயுள்ள உதவி மையத்தை நேரடியாகவும், 011-23385271/011-23381125 / 011-23098543 என்ற போன் எண்களிலும், வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

     
    Published by:Salanraj R
    First published:

    Tags: UPSC

    அடுத்த செய்தி