Home /News /employment /

மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை

மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை

CISF Recruitment 2021: மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை காலியாக உள்ள 249 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

    மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை(Central Industrial Security Force), 1983 ஜூன் 15ல் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆயுதமேந்திய மத்திய காவல் படைகளுள் ஒன்றாகும். இது இந்தியாவின் முக்கிய தொழில் நிலையங்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை இராணுவப்படையாகும். அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டிடங்கள், புராதான சின்னங்கள் போன்றவைகளை பாதுகாக்கிறது. இதன் தலைமை செயலகம் புது தில்லியில் உள்ளது. இந்தப் படை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

    தற்போது மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை காலியாக உள்ள 249 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிந்து விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரம் :



















































    நிறுவனம் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை(Central Industrial Security Force)
    வேலையின் பெயர் Head Constable
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 249 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம் 18- 23 வயது உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
    தேர்வு செய்யப்படும் முறை Physical Standard Test (PST)
    Documentation
    Trial Test
    Proficiency Test.மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதி

    12ம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

    தமிழ்நாடு / இந்தியா / சர்வதேச அளவு விளையாட்டு வீரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
    சம்பள விவரம் ரூ. 25,500-81,100/-
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 18.12.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2021
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் SC/ST/Women விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் கிடையாது SC/ST/Women விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் கிடையாது Other Candidates ரூ.100/-
    இணையதள முகவரி https://www.cisf.gov.in/cisfeng/recruitment/

    உடல் தகுதி:

    உயரம்

    ஆண்கள் - 167 செ.மீ
    பெண்கள் - 153 செ.மீ

    மார்பு

    ஆண்கள் - 81-86 செ.மீ

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    Notification Link

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி