ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

787 கான்ஸ்டபிள்/ டிரேட்ஸ்மேன் பணியிடங்ககள்: 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

787 கான்ஸ்டபிள்/ டிரேட்ஸ்மேன் பணியிடங்ககள்: 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு செய்திகள்

அங்கீகரிக்கப்பட்டவாரியத்தின் மூலம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  மத்திய தொழில் பாதுகாப்பு படையில் CONSTABLE/TRADESMEN நிலை பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பது வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

  காலியிடங்கள்: 787

  முக்கியமான நாட்கள்:

  இணைய வாயிலாக விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்குரிய நாள்:  21/11/2022 முதல்  20/12/2022 வரை

  விண்ணப்பக் கட்டணம்:ரூ .100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், மகளிர் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

  வயது வரம்பு : இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க 01.08.2022 அன்று 18க்கு மேலும், 23க்கு கீழும் இருக்க வேண்டும். பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் ஐந்து ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும். ஓபிசி பிரிவினர் 3 ஆண்டுகள் வரை சலுகை பெற தகுதியுடைவர்கள்.

  கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தின் மூலம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியில் ((equivalent education) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி சுகாதார அலுவலர் பதவி... ரூ.2,09,200 வரை சம்பளம் - உடனே விண்ணப்பியுங்கள்!

  விண்ணப்பம் செய்வது எப்படி?

  www.cisfrectt.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் வண்ண பாஸ்போர்ட் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அது தேர்வு அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 3 மாதத்துக்கு மேல் பழையதாக இருக்க கூடாது என்றும் கூறப்படுகிறது.

  தெரிவு செய்யப்படும் முறை: தெரிவு முறை 2 நிலைகளைக் கொண்டுள்ளது.

  முதலில், உடல்தகுதித் தேர்வு, உடல்திறன் போட்டிகள், தகுதி ஆவணங்கள் சரிபாரிப்பு, தொழில்முறை  தேர்வுகள் ( Physical Standard Test/Physical Efficiency Test, Documentation & Trade Test)

  இதில், தகுதி பெரும் விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். தொழிற்திறன் தேர்வு, எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும். 

  இதையும் வாசிக்க: 6503 ரேஷன் கடை காலியிடங்கள்: இன்றே கடைசி நாள்... விண்ணப்பம் செய்வது எப்படி?

  இந்த ஆள்சேர்ப்பு குறித்த அவ்வப்போதைய நிலவரங்களை தெரிந்து கொள்ள இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Central Government Jobs