வேலைவாய்ப்புகள் 4 ஆண்டுகளில் 14% அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

ஏற்றுமதி துறையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் முக்கிய இடங்களில் உள்ளன.

News18 Tamil
Updated: March 8, 2019, 8:35 PM IST
வேலைவாய்ப்புகள் 4 ஆண்டுகளில் 14% அதிகரிப்பு: ஆய்வில் தகவல்
மாதிரி படம் (ராய்ட்டர்ஸ்)
News18 Tamil
Updated: March 8, 2019, 8:35 PM IST
கடந்த 4 ஆண்டுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் வேலைவாய்ப்புகள் 13.9 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ)சார்பில் வெளியிட்டுள்ள இந்த ஆய்வில் கடந்த 4 நான்காண்டுகளில் மட்டும் 332394 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு 3.3% வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள சுமார் 105347 குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், அதிக வேலைவாய்ப்புகளை குறு நிறுவனங்களில் தான் உருவாகியிருப்பதாக தெரிய வருகிறது.


குறிப்பாக வேலைவாய்ப்புகளை அளிக்கும் துறையில் சுற்றுலா முதலிடம் வகிக்கிறது. அடுத்தப்படியாக, ஜவுளித்துறையும், உலோகப்பொருட்கள் தயாரிப்பு துறையும் இடம் பெறுகின்றன. இயந்திர உதிரி பாகங்கள், போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ் ஆகிய துறைகளும் வேலைவாய்ப்பை உருவாக்கியதில் முக்கிய பங்குவகிக்கின்றன.

அதேபோல், மாநிலங்கள் வரிசையில் மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில் முக்கிய இடங்களில் உள்ளன. ஏற்றுமதியில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் முக்கிய இடங்களில் உள்ளன.

அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு கூறுகிறது.

Loading...

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) கடந்த 2017-18-ம் ஆண்டு வேலையின்மை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், வேலையின்மை நிலவரம் 6.1 % அதிகரித்துள்ளதாகவும், இது கடந்த 1972-73-ம் ஆண்டுக்குப்பின் மிகப்பெரிய உயர்வாகும் எனவும் தகவல் வெளியாயின. இந்நிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் நான்காண்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

First published: March 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...