ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை.. விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை.. விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!

தமிழ்நாடு தகவல் ஆணையம்

தமிழ்நாடு தகவல் ஆணையம்

TN job alert : தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு ஆணையர் பதவிக்கான வேலைவாய்ப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க அவகாசம் முடிந்த நிலையில் மீண்டும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு மாநிலத் தலைமை தகவல் ஆணையர் மற்றும் நான்கு மாநில தகவல் ஆணையர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் தற்போது இதனை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.

  பணியின் விவரங்கள்:

  பதவியில் பெயர்காலிப்பணியிடம்
  மாநிலத் தலைமை தகவல் ஆணையர்1
  மாநில தகவல் ஆணையர்4

  தகுதி:

  மாநில தகவல் ஆணையத்தில் தலைமை மற்றும் மாநில தகவல் ஆணையர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதார்கள் பொது வாழ்க்கையில் நன்கு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சட்டம்,அறிவியல்,தொழில்நுட்பம்,சமூக அறிவியல், இதழியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றில் பொது அறிவு பெற்றிருக்க வேண்டும்.

  விண்ணப்பிக்கும் முறை:

  இந்த தலைமை பொறுப்பிற்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் தகுதி விவரங்களை சுய விவரப் பட்டியலுடன் சேர்த்து தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

  தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

  The Chairperson,

  Search Committee,

  O/o the Additional Cheif Secretary to Government,

  Rural Development and Panchayat Raj Department,

  Secretariat, Chennai - 600 009.

  Also Read : ரயில்வேயின் ஐடி நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள்... விண்ணப்பிக்க 21-ம் தேதி கடைசி நாள்!

  மின்னஞ்சல் முகவரி: ruraisec@tn.gov.in

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 13.08.2019. மாலை 05.00 மணி வரை.

  அறிவிப்பு 1 / அறிவிப்பு 2/ அறிவிப்பு 3

  மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Jobs, Tamil Nadu Government Jobs