ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ஜிஎஸ்டி மூலம் அதிக லாபத்தை பெறுவது எப்படி? இதோ அதற்கான எளிமையான தீர்வு

ஜிஎஸ்டி மூலம் அதிக லாபத்தை பெறுவது எப்படி? இதோ அதற்கான எளிமையான தீர்வு

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

பொருட்கள் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் மின் வழிச் சீட்டின் அடிப்படை கணக்குகள் விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள் பயிற்றுவிக்கப்படும்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சென்னையில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புதிதாக்க நிறுவனம், ஜிஎஸ்டி மற்றும் மின்னணு ரசீது (Gst & E- Way Billing   Advance) முறை  குறித்த  3 நாள் இணையவழி பயிற்சியை நடத்துகிறது. ஆர்வமுள்ளவர்கள், இதில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  முன்னதாக, மத்திய மாநில அரசுகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை அளிப்பவர்கள் கட்டண ரசீது மற்றும் கோரிக்கைகளை மின்னணு முறையில் அனுப்பும் முறையை (E- way billing) மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த புதிய  முறை மூலம் மின்னணு-ரசீது முறையில், வியாபாரிகள், விநியோகிப்பாளர்கள் தங்களின் ரசீதுகள் மற்றும் துணை ஆவணங்களை டிஜிட்டல் கையெழுத்துடன் ஆன்லைன் மூலம், எங்கிருந்தும் எப்போதும் பதிவேற்றம் செய்ய முடியும். இந்நிலையில், இந்த புதிய முறை குறித்த 3 நாள் பயிற்சியை தமிழ்நாடு தொழிற் முனைவோர் மேம்பாடு நடத்துகிறது.

  இணையவழி பயிற்சி நடைபெறும் நாள்:   22.11.2022 தேதி முதல் 24.11.2022-ம் தேதி வரை (காலை 10.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை) நடத்தப்படும். முன்பதிவு அவசியம் என்பதால் உடனடியாக பதிவு செய்து கொள்ளுங்கள்.      

  இதையும் வாசிக்க: ஓசூரில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி... 16 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு.... அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்

  இப்பயிற்சியில்,  பொருட்கள் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் மின் வழிச் சீட்டின் அடிப்படை கணக்குகள் விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள் பயிற்றுவிக்கப்படும். மேலும், இப்பயிற்சியில் அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  இதையும் வாசிக்க: ஐ.டி துறையில் அதிக சம்பளத்துடன் ஒரு நல்ல வேலை வேண்டுமா? இந்த செய்தி உங்களுக்குத் தான்

  இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில்,  9444556099, 9677152265, 044-22252081/22252082  என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.  

  நேரடியாக அணுக வேண்டிய முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,

  சிட்கோ தொழிற்பேட்டை,

  பார்த்தசாரதி கோயில் தெரு,  ஈக்காட்டுத்தாங்கல்,

  சென்னை – 600032 ஆகும். 

  எனவே, நீங்கள் அரசுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை அளித்து வருவோராக அல்லது எதிர்காலத்தில் வழங்க முனைவோராக இருந்தால் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு கலந்து கொள்ளுங்கள்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: GST