Home /News /employment /

சென்னை சமூகநலத்துறையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும்?

சென்னை சமூகநலத்துறையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும்?

விரும்பும் பதவிகளுக்கு https chennaiinic in/  எனும் இணையத்தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் கீழ்காணும் முகவரிக்கு ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விரும்பும் பதவிகளுக்கு https chennaiinic in/ எனும் இணையத்தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் கீழ்காணும் முகவரிக்கு ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விரும்பும் பதவிகளுக்கு https chennaiinic in/ எனும் இணையத்தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் கீழ்காணும் முகவரிக்கு ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மைய நிர்வாகி (Centre Administrator) (காலிப்பணியிடங்கள் 1) :

    சமூகப் பணியில் முதுகலை பட்டம் (Master's Degree in Social Work / Psychology) பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசனை அல்லது வளர்ச்சி மேலாண்மையில் பெண்கள் பிரச்சினைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாரா திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் குறைந்த பட்சம் 4 வருட அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். தங்குமிடம் வழங்கப்படும். மாத ஊதியம் 30,000/- ஆகும்.

    மூத்த ஆலோசகர் (Senior Counsellor) : (காலிப்பணியிடங்கள் 1)

    சமூகப் பணியில் முதுகலை பட்டம் M.S.W (Master's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும். ஆலோசானை உளவியல் M.SC (Counselling Psychology). வளர்ச்சி மேலாண்மை (Development Management) குறைந்தபட்ச இரண்டு ஆண்டுகள் அனுபவம் கொண்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து காக்கும் அரசு அல்லது அரசு சாராத திட்டங்களுடன் ஒரு நிர்வாக அமைப்பில் பணிபுரிந்திருக்க வேண்டும். (அல்லது) ஒரு வருட அனுபவத்தில், அதே கால அமைப்புக்குள்ளேயே அல்லது அதற்கு வெளியே பணிபுரிந்திருக்க வேண்டும். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். வேலை தொடர்பாக பயணம் மேற்கொண்டால் பயணப்படி வழங்கப்படும். மாத ஊதியம் ரூ.20,000/ஆகும்.

    வழக்கு அலுவலர்கள் (Case worker) (காலிப்பணியிடங்கள் 11) :

    சமூகப் பணியில் இளங்கலை பட்டம் (Bachelor's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும். உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும் வயது 35க்குள் இருக்க வேண்டும் உள்ளுரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம், வாகனம் ஒட்டத் தெரிந்திருக்க வேண்டும் தேவைப் படும் பட்சத்தில் சுழற்சி முறையில் -நாட்களிலும் 24 நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் ரூ.15,000/ ஆகும்.

    ALSO READ |  கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை - 10ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
    பன்முக உதவியாளர் (Multi-purpose Helper) (காலிப்பணியிடங்கள்3) 


    ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.6400/- ஆகும்.

     

    பாதுகாப்பாளர் (Security Guard) (காலிப்பணியிடங்கள் 4)

    அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளுரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். ஆண். பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.10,000/- ஆகும்.

    விரும்பும் பதவிகளுக்கு https chennaiinic in/ எனும் இணையத்தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் 30.06.2022 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8வது தளம், சிங்காரவேலன் மாளிகை. இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது chndswo.4568@gmail.com என்ற முகவரிக்கோ விண்ணப்பம் செய்திடுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி