Home /News /employment /

பென்சன் பெறுபவர்களுக்கு ஹேப்பி நியூஸ்... அஞ்சல் துறையின் சிறப்பு ஏற்பாடு

பென்சன் பெறுபவர்களுக்கு ஹேப்பி நியூஸ்... அஞ்சல் துறையின் சிறப்பு ஏற்பாடு

பென்ஷன்

பென்ஷன்

இதற்கு சேவை கட்டணமாக, தபால்காரரிடம் ரூ.70 ரொக்கமாக செலுத்த வேண்டும்

    சென்னை மாநாகராட்சி ஓய்வூதியதாரர்கள் தங்கள் டிஜிட்டல் உயிர்வாழ் (digital life certificates) சான்றிதழைத் தங்கள் வீட்டிலிருந்தபடியே சமர்ப்பிக்க அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

    கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக, வருடாந்திர உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிப்பதிலிருந்து பெருநகர சென்னை மாநகராட்சி ஓய்வூதியதாரர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு பெருநகர சென்னை மாநகராட்சி ஓய்வூதியம் பெறுவோர், வருகிற ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தங்களது உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் “இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி”, ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே கைவிரல் ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக, தபால்காரரிடம் ரூ.70 ரொக்கமாக செலுத்த வேண்டும்.

    ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும் என்று சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: India post, Pension Plan

    அடுத்த செய்தி