ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு: ரூ.30,000 வரை சம்பளம்

சென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு: ரூ.30,000 வரை சம்பளம்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

Chennai OSC Centre Recruitment: விரும்பும் பதவிகளுக்கு உரிய சான்றிதழ்களுடன் 27.10.2022 மாலை 5.00 மணிக்குள் நேரடியாக விண்ணப்பம் செய்திடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  Chennai OSC Centre Recruitment:  வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவை ஒருங்கிணைந்த சேவை மையம் அளித்து வருகிறது. இந்த மையத்தில் உள்ள மைய நிர்வாகி, வழக்கு அலுவலர்கள், பாதுகாப்பாளர், பன்முக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  மைய நிர்வாகி (Centre Administrator) (காலிப்பணியிடம் -1 )

  சமூகப் பணியில் முதுகலை பட்டம் (Master's Degree in Social Work / Psychology) பெற்றிருக்க வேண்டும்.

  உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் குறைந்தபட்சம் 4 வருட அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.

  உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் ரூ.30,000/ஆகும்.

  இதையும் வாசிக்க: இந்திய ரயில்வே துறையில் 3115 காலி பணியிடங்கள்; 8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்

  வழக்கு அலுவலர்கள் (காலிப்பணியிடங்கள் -  6)

  சமூகப் பணியில் இளங்கலை பட்டம் (Bachelor's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும்.

  உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட உடையவராகவும் இருக்க வேண்டும்.

  இதையும் வாசிக்கசென்னை இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியில் 61 காலி பணியிடங்கள்: முழு விவரம் இதோ

  வயது 35க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தேவைப் படும் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் ரூ.15,000/ஆகும்.

  பாதுகாப்பாளர் (Security Guard) (காலிப்பணியிடங்கள் 2):  அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.10,000/- ஆகும்.

  இதையும் வாசிக்க: மகளிர் தனிச்சிறையில் வேலை வாய்ப்பு; ஆர்முள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

  பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) (காலிப்பணியிடம் 1) 

  ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.6400/- ஆகும்.

  விரும்பும் பதவிகளுக்கு உரிய சான்றிதழ்களுடன் 27.10.2022 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8வது தளம், சிங்காரவேலன் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை 01 என்ற முகவரியில் நேரடியாக விண்ணப்பம் செய்திடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job vacancies, Job Vacancy, Recruitment