ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

பெண்களுக்கான வேலைவாய்ப்பு.. ரூ.20,000 வரை மாதச் சம்பளம் - உடனே விண்ணப்பியுங்கள்

பெண்களுக்கான வேலைவாய்ப்பு.. ரூ.20,000 வரை மாதச் சம்பளம் - உடனே விண்ணப்பியுங்கள்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Chennai OSC Centre Recruitment Jobs: விரும்பும் பதவிகளுக்கு https://chennai.nic.in/ என்னும் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] |

    சென்னையில் செயல்பட்டு வரும் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One-Stop Centre Scheme) மூத்த ஆலோசகர், வழக்கு அலுவலர்கள், பாதுகாப்பாளர், பன்முக உதவியாளர் ஆகிய காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மூத்த ஆலோசகர் (Senior Counsellor) (vacancy 1)

    மாத ஊதியம் ரூ.20.000/- ஆகும்.

    உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வேலை தொடர்பாக பயணம் மேற்கொண்டால் பயணப்படி வழங்கப்படும்.

    கல்வித் தகுதி: சமூகப் பணியில் முதுகலை பட்டம் M.S.W (Master's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும். ஆலோசனை உளவியல் M.Sc (Counselling Psychology or Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் கொண்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாக அமைப்பில் பணிபுரிந்திருக்க வேண்டும். அல்லது 1 வருட கால அனுபவத்தில், அதே அமைப்புக்குள்ளேயே அல்லது வெளியிலோ பணிபுரிந்திருக்க வேண்டும்.

    வழக்கு அலுவலர்கள் (காலிப்பணியிடங்கள் - 6)

    வயது 35க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தேவைப்படும் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் ரூ.15,000/ஆகும்.

    கல்வித் தகுதி: சமூகப் பணியில் இளங்கலை பட்டம் (Bachelor's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும்.

    உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட உடையவராகவும் இருக்க வேண்டும்.

    இதையும் வாசிக்க: 2,748 கிராம உதவியாளர் காலி பணியிடங்கள்: எழுத்துத் தேர்வுக்கு தயாராவது எப்படி?

    பாதுகாப்பாளர்: (Security Guard) (காலிப்பணியிடங்கள் 2):

    மாத ஊதியம் ரூ.10,000/- ஆகும்.

    அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.

    பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) (காலிப்பணியிடம் 2)

    ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.6400/- ஆகும்.

    விண்ணப்பம் செய்வது எப்படி?

    விரும்பும் பதவிகளுக்கு https://chennai.nic.in/ என்னும் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன், 25.11.2022 அன்று மாலை 5.00 மணிக்குள்

    மாவட்ட சமூகநல அலுவலகம்,

    மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8வது தளம்,

    சிங்காரவேலன் மாளிகை,

    இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது chndswosouth@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பம் செய்திட வேண்டும்.

    விண்ணப்பப் படிவம்

    Published by:Salanraj R
    First published:

    Tags: Jobs, Tamil Nadu Government Jobs, Tamil News